13ந் தேதி திரைக்கு வரும்.. வித்தியசமான பேய் "கைலா"!

சென்னை : கைலா படம் இம்மாதம் 13ந் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன் தெரிவித்துள்ளார். வழக்கமான பேய் படமாக இது இல்லாமல் வித்தியாசமான விஞ்ஞானபூர்வமான ஒரு பேய் படமாக இருக்கும் என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் எப்போதுமே பேய்களுக்கு என்று ஒரு மவுசு உண்டு, காஞ்சனா, அரண்மனை, தேவி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது கைலா படம் சேர்ந்துள்ளது. இப்படம் வரும் 13ந் தேதி திரைக்கு வர உள்ளதாக அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான பாஸ்கர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 Kaila movie release on December 13th

இந்த உலகத்துல ஆவிகள் இருக்கா?அப்படி இருந்தாலும் அந்த ஆவிபழிவாங்குமா? இந்த கேள்விகளுக்கு விஞ்ஞானப்பூர்வமாக இதுவரை யாரு கிட்டதையும் பதில் இல்லை. ஆனாலும் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கு, இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் கைலா.

நாயகி தானா நாயுடுவுக்கு இது முதல் படம், இப்படத்தில் ஒரு எழுத்தாளராக வரும் தானாநாயுடு, பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுக்கும் போது, பல வருடங்களாக பூட்டியே இருக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்குறாங்க. அந்த மர்மமான வீட்டில் இரண்டு தற்கொலைகள், எதிர்பாராத திகில் சம்பவங்கள், நான்கு கொலைகள், என படு பயங்கரமான த்ரில்லிங் திரைக்கதையை அமைத்துள்ளோம்.

இதை நான் சொல்லுறத விட படத்தை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் வியப்படையவார்கள், வழக்கமான பேய் படமாக இது இல்லாமல் வித்தியாசமான விஞ்ஞானபூர்வமான ஒரு பேய் படமாக இது இருக்கும் என்று தயாரிப்பார் பாஸ்கர் சீனிவாசன் தெரிவித்தார். இப்படத்தில், கௌசல்யா, அன்பாலயா பிரபாகரன், சிசர்மனோகர், மதுரை வினோத், வீரா, கோகன், குழந்தை நட்சத்திரம் கைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரவன் இசையமைந்துள்ளார்.

More from Filmibeat

Read more about: movie சினிமா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X