கார்த்திக்கு கல்தா.. பெரிய நடிகர்களுக்காக கைதி 2வை நடுத்தெருவில் விடுகிறாரா லோகி? ஏகப்பட்ட உரசலாமே?

சென்னை: தமிழ் சினிமாவில் இன்றைக்கு உச்ச இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவரது படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் கதை சொல்லும் இவரது திரை மொழிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அப்படி இருக்கும்போது இவர் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படம் கைதி 2 என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தபோது, அந்த படத்திற்கு கார்த்திக் ஓ.கே சொல்லாமல் இருக்கிறாராம். அதுதான் தற்போது டாக் ஆஃப் த டவுனாக இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படம் வெளியானது. ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை; விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய ஏமாற்றத்தை அளித்ததாகக் கூறப்பட்டது. இதனால், லோகேஷ் கனகராஜின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பலரும் 'கைதி 2' தான் அவரது அடுத்த படமாக இருக்கும் என தெரிவித்தனர் அவரும் கூட சில பேட்டிகளில் கைதி 2 தான் என்று கூறி வந்தார். ஆனால், கைதி 2 தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, படப்பிடிப்பும் தொடங்கவில்லை.

Kaithi 2 Dropped Because of Lokesh Kanagaraj Handle Karthi As Very Lethargically

கடுப்பான கார்த்தி: இப்படி இருக்கும்போது, கைதி படத்தை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம், கைதி 2 படத்தை எடுக்கலாம் என்று கூறிவிட்டு, கார்த்தியை விட பெரிய நடிகருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் கைதி 2 படத்தை ஒதுக்கி வைத்துவிடுகிறாராம் லோகேஷ் கனகராஜ். இது பொறுமையாக இருந்த கார்த்தியை ஒரு கட்டத்தில் கடுப்பேற்றி உள்ளது. இதனால் தற்போது கைதி 2 படத்தின் மீது கார்த்தி ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

அஜித் - அல்லு அர்ஜுன்: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அஜித்துக்கு ஒரு கதை சொன்னதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதாகவும், ஆதிக் படத்தை முடித்துவிட்டு, கார் ரேஸ் கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அல்லு அர்ஜுனுக்கும் கதை சொல்லி உள்ளார். அந்த கதை அல்லு அர்ஜுனுக்குப் பிடித்துப்போனதால், அல்லு அர்ஜுன் அட்லி படத்தை முடித்துவிட்டு, புஷ்பா 3 படத்தின் சூழலைப் பார்த்துவிட்டு தேதிகள் தருவதாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X