எதிர்காலத்தில் கைதி 2 வை எதிர்பார்க்கலாம் - தயாரிப்பாளர் உறுதி!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் கைதி.
இந்த படத்தை Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்தது. சாம் C S இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

தீபாவளி வெளியீடு
மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் கைதி. கைதி திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் தீபாவளி ரேஸில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகிலுடன் போட்டி போட்டுக்கொண்டு வெளியானது.

பலரையும் கவர்ந்தது
பிகிலுடன் சரிசமமாக போட்டியிட்டு இந்த படமும் பல ரசிகர்களை கவர்ந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்றது கைதி திரைப்படம். அவ்வேளையில் கார்த்தியின் நடிப்பில் பெரிதும் ரசிகர்களை ஈர்த்த படமாக கைதி திரைப்படம் சொல்லப்பட்டது.

தயாரிப்பாளர் உறுதி
அப்போதிலிருந்து ரசிகர்கள் கைதி - 2ம் பாகத்தினை எதிர்பார்த்து காத்துள்ளனர். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் S R பிரபு சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் உடனான கலந்துரையாடலில் எதிர்காலத்தில் நிச்சயமாக கைதி 2ம் பாகத்தை எதிர்பார்க்கலாம் என உறுதியளித்துள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விக்ரம், கார்த்திக்கு பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து படங்கள் உள்ள நிலையில் கைதி 2ம் பாகத்தை நாம் ஓரிரு வருடங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











