Kaithi 2: சூப்பர் ஸ்டாரால் கார்த்தியின் கைதி 2க்கு வந்த சிக்கல்... லோகேஷ் இப்படி மாறிட்டாரே?
சென்னை: இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியொ படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி கொண்டிருக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது.
லியோ ரிலீஸானதும் கார்த்தி நடிப்பில் கைதி 2ம் பாகத்தை இயக்க முடிவு செய்திருந்தார் லோகேஷ்.
ஆனால், தற்போது அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரால் கைதி 2க்கு வந்த சிக்கல்: கோலிவுட் டாப் ஹீரோக்களின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமான அவர் நான்கே படங்களில் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். லோகேஷ் இயக்கிய இரண்டாவது படமான கைதி தான் அவரை உச்சத்தில் கொண்டு சேர்த்தது. கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ், தற்போது லியோ படத்தில் பிஸியாக காணப்படுகிறார். LCU கான்செப்ட்டில் உருவாகும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லியோ ரிலீஸானதும் கார்த்தியின் நடிப்பில் கைதி 2ம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என சொல்லப்பட்டது. இதற்காக கார்த்தியும் லோகேஷ் கனகராஜ்ஜும் ஏற்கனவே ரெடியாகிவிட்டனர்.
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட லோகேஷ் தலைவருக்காக தரமான ஸ்கிரிப்ட் ஒன்றை ரெடி செய்துள்ளாராம். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்ட ரஜினி, அடுத்து லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தான் ரஜினியின் தலைவர் 171 படத்தையும் அடுத்தாண்டே தொடங்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்காக ரஜினி காத்திருப்பதால் லோகேஷ் கனகராஜ் ஓக்கே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனால் பாதிக்கப்படுவது என்னவோ கார்த்தியாக தான் இருப்பார். கைதி 2 படத்துக்காக கால்ஷீட் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார் கார்த்தி.
இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தால், கைதி 2 தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தால் பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் இருந்து விலகினார் கார்த்தி, அதன்பின்னரே அதில் ஆர்யா நடித்தார். தற்போது இது கைதி 2ம் பாகத்திலும் தொடரும் சூழல் காணப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











