Kaithi 2: ரோலக்ஸுடன் மோதும் டில்லி... கைதி 2ம் பாகத்தில் சூர்யா..? லைஃப் டைம் செட்டில்மெண்ட்

சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

லியோ வெளியானதும் கார்த்தியின் கைதி 2 படப்பிடிப்பை தொடங்க லோகேஷ் முடிவு செய்துவிட்டாராம்.

லோகேஷின் யுனிவர்ஸில் உருவாகும் கைதி 2ம் பாகத்தில் கார்த்தியுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படமும் லோகேஷின் தரமான சம்பவமாக இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோலக்ஸ் Vs டில்லி - கைதி 2வில் தரமான சம்பவம்:மாநகரம் படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், நான்கே படங்களில் கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநராக மாஸ் காட்டி வருகிறார். மாநகரம் படத்திற்குப் பின்னர் லோகேஷ் இயக்கிய கைதி தான் அவரை உச்சத்தில் கொண்டு சேர்த்தது. கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

 Kaithi 2: Suriya to join Karthi in Kaithi 2 directed by Lokesh Kanagaraj

கைதி ஹிட்டானதும் விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார் லோகேஷ். இதில் விக்ரம் படம் லோகேஷின் யுனிவர்ஸில் உருவாகி இடண்ட்ஸ்ட்ரி ஹிட் அடித்தது. அதிலிருந்து இனிமேல் தான் இயக்கும் படங்களில் LCU கான்செப்ட் இருக்கும் என லோகேஷ் தெரிவித்திருந்தார். அதனால் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் லியோ வெளியானதுமே கைதி 2 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்காக கார்த்தியும் லோகேஷ் கனகராஜ்ஜும் ஏற்கனவே ரெடியாகிவிட்டனர். தற்போது சூர்யாவும் கைதி 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கைதி படத்தில் கார்த்தியின் டில்லி கேரக்டர் ரசிகர்களின் ஃபேவரைட்டாக அமைந்தது. அதேபோல், விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் சூர்யா.

கார்த்தியின் டில்லி, சூர்யாவின் ரோலக்ஸ் இந்த கேரக்டர்களும் மோதும் படமாக தான் கைதி 2 உருவாகவுள்ளதாம். ஏற்கனவே கார்த்தி ஹீரோவாகவும் தான் வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசை எனவும் சூர்யா கூறியிருந்தார். அவரின் இந்த ஆசை தற்போது லோகேஷ் மூலம் உண்மையாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் சூர்யா, கார்த்தி இருவருக்குமே லைஃப் டைம் செட்டில்மென்ட் படமாக கைதி 2 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், விஜய்யின் லியோ படத்தில் கைதி 2ம் பாகத்துக்கான லீட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கைதி 2ம் பாகத்தில் கார்த்தி, சூர்யா ஆகியோருடன் நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ ரிலீஸானதுமே கைதி 2ம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. கார்த்தி - சூர்யா இருவரும் கைதி 2 படத்தில் இணைந்தால் அது செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X