இரண்டு வருஷம் டேட்டிங்.. கைதி நடிகர் நரேனின் காதல் கதை.. மனம் திறந்த மனைவி!

சென்னை: கைதி பட நடிகர் நரேனின் காதல் கதை மற்றும் திருமணம் குறித்து அவரது மனைவி மஞ்சு யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் உருவான நிழலுகுத்து என்ற மலையாளத்திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து தமிழில் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த, சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதில் ரவுடி தனமான கதாபாத்திரத்தி நடித்து இருப்பார்.

Kaithi actor narain wife manju haridas talks about his love story

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நரேன் வில்லனாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நடிகர் நரேன்: அதன்பின் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் மாறி மாறி நடித்து வந்த நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான கைதி திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் பிஜாய் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் நடித்தார். இதையடுத்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படத்திலும் பிஜாய் கதாபாத்திரத்தில் நடித்தார்.

நரேரின் மனைவி மஞ்சு: நரேன் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மஞ்சு ஹரிதாஸ் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு 14 வயதில் தன்மயா என்ற மகள் இருக்கும் நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அண்மையில் மகனின் முதல் பிறந்த நாளை இவர்கள் சிறப்பாக கொண்டாடி புகைப்படம் இணையத்தில் வெளியாது.

காதல் திருமணம்: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் நரேனின் மனைவி மஞ்சு, அதில், நான் தொகுப்பாளினியாக இருக்கும் போது நரேனைப் பார்த்தேன், நாங்கள் இரண்டு ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தோம் பின் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். தற்போது 14 வயதில் தன்மயா என்ற மகளும், ஒரு வயதில் ஓம்கார் என்ற மகனும் இருக்கிறான். தொகுப்பாளினியாக இருந்த எனக்கு இப்போது இருக்கும் ஒரே வேலை மகனை பார்த்துக்கொள்வதுதான்.

கதையில் தலையிட மாட்டேன்: நரேன் தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் மாறி மாறி நடித்துக்கொண்டு இருந்தார். இதனால், நாங்கள் சில காலம் சென்னையில் இருந்தோம். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக எர்ணாகுளத்தில் செட்டிலாகிவிட்டோம்.மேலும், நடிக்கும் படத்தின் கதை குறித்து எப்போதும் என்னிடம் சொல்லுவார், நான் அதை கேட்டுக்கொள்வேன். ஆனால், கதை விஷயத்தில் தலையிட மாட்டேன். அதே போல, தமிழில் நரேன் நடித்த அஞ்சாதே படம் எனக்கு மிகவும் பிடிக்கும் அதே போல மலையாளத்தில் கிளாஸ்மேட்ஸ் மற்றும் பந்தயக்கோழி படம் பிடிக்கும்.

குயின் எலிசபெத்: எனது கணவர் மீரா ஐஸ்மினுடன் பல வருடத்திற்கு பிறகு குயின் எலிசபெத் படத்தில் இணைந்து நடித்துள்ளார். அந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். அது அனைத்து ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். நான் ஒரு மனைவியாக அல்ல, பார்வையாளர்களாக, இன்னும் அவரை நேசிக்கிறேன் என்றார். எலிசபெத் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பத்மகுமார் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில் நரேன், மீரா, இப்படத்தில் ஸ்வேதா மேனன், ரமேஷ் பிஷாரடி, வி.கே.பிரகாஷ், ரஞ்சி பணிக்கர், ஜானி ஆண்டனி, மல்லிகா சுகுமாரன், ஜூட் அந்தோணி ஜோசப், ஆர்யா ஸ்ருதி ரஜினிகாந்த், பேர்ளி மணி, சானியா பாபு, நீனா குருப் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X