5ஆம் நாளில் பிகிலை வீழ்த்தி விரட்டியடித்த கைதி .. அமெரிக்காவில் அள்ளியிருக்க வசூலை பாருங்க!
Recommended Video
சென்னை: அமெரிக்காவில் பிகிலை ஓரங்கட்டி வசூலில் முந்தியிருக்கிறது கைதி படம்.
இந்த வரும் தீபாவளி ரிலீஸாக தமிழில் கைதி, பிகில் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. விஜய் நடிப்பில் பிகில் படமும் கார்த்தி நடிப்பில் கைதி படமும் ரிலீஸ் ஆனது.
பிகில் படம் பெரிய பட்ஜெட் என்பதால் தமிழகம் முழுவதும் அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸானது. கால்பந்தாட்டத்தை மையமாக கொண்ட இந்த படம் மக்களை கவரும் வகையில் இல்லை என கூறப்படுகிறது.

பெருகும் வரவேற்பு
அதே நேரத்தில் கைதி படம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும வரவேற்பால், தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கைதிக்கு கிடைக்கல
ஆனாலும் பிகில் படத்திற்கு எளிதில் டிக்கெட் கிடைப்பதாகவும், கைதி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் நாள் மட்டுமே
இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பிகில் மற்றும் கைதி படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் முதல் நாளில் வசூலை குவித்தது பிகில் படம்.

குவிக்கும் கைதி
ஆனால் அடுத்த நாளே வசூல் குறையத் தொடங்கி இறங்கு முகத்தில் இருந்து வருகிறது பிகில். அதே நேரத்தில் ஏறுமுகத்தில் உள்ள கைதி தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

50ல் பிகில்
அமெரிக்காவில் 90 தியேட்டடர்களில் பிகில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் வெறும் 50 தியேட்டர்களில் மட்டுமே கைதி படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

பிகிலை வீழ்த்திய கைதி
இருப்பினும் 5ஆம் நாளான நேற்று அமெரிக்காவில் பிகிலை வீழ்த்தி வசூலில் முந்தியிருக்கிறது கைதி. நேற்றைய நிலவரப்படி அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில், 50 தியேட்டர்களில் ரிலீஸான கைதி படம், 21024 டாலர்களை வசூலித்திருக்கிறது.
பிகில் வசூல்
90 தியேட்டர்களில் ரிலீஸான பிகில் படம் 20098 டாலர்களை மட்டுமே வசூலித்திருக்கிறது. இந்த தகவலை வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

உற்சாகம்
தமிழகத்தில் பிகிலை முந்தி வரும் கைதி தற்போது அமெரிக்காவில் பிகிலை ஓரங்கட்டியிருப்பது படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











