அடித்துத் தூக்கிய கைதி.. குவியும் கூட்டம்.. அதிகரிக்கும் தியேட்டர்ஸ்.. அள்ளும் வசூல்!

Recommended Video

Kaithi Box Office:முதல் நாளிலேயே 'பெத்த' Collection

சென்னை: கைதி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

விஜயின் பிகில் படத்திற்கு போட்டியாக கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது கைதி படம். கைதி படத்தை கார்த்தி நடிப்பில் இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.

பிகில் படத்திற்கு அதிக தியேட்டர்கள் புக் செய்யப்பட்டதால், கைதி படம் தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் படம் ரிலீஸான பிறகு, பாஸிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

முதல் நாள் 3 கோடி

முதல் நாள் 3 கோடி

இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் கைதி படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படம் முதல் நாள் ரூ 3 கோடி வசூல் செய்தது.

3.5 கோடி வசூல்

3.5 கோடி வசூல்

இரண்டாவது நாள் வசூல் அதிகரித்தது. அதாவது இரண்டாவது நாளில் கைதி படம் ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் ரூ 37 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருக்கிறது கைதி படம்.

காட்சிகள் அதிகரிப்பு

காட்சிகள் அதிகரிப்பு

முதல் நாளில் கைதி படத்திற்கு தமிழகத்தில் மிகக் குறைவான அளவிலேயே தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் கைதி படம் குறித்த மக்களின் விமர்சனங்கள் மற்றும் வரவேற்பில் அடிப்படையில் கைதி படத்திற்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல காட்சிகள் அதிகரித்துள்ளன.

வசூல் அதிகரிக்கும்

வசூல் அதிகரிக்கும்

இதனால் கைதி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் கைதி படம் ஹவுஸ்ஃபுல்லாகி வருகிறது.

அடித்து தூக்கும் கைதி

அடித்து தூக்கும் கைதி

ஒரு பக்கம் பிகில் படத்திற்கனா வரவேற்பும் கலெக்ஷனும் குறைந்து வருகிறது. அதேநேரத்தில் கைதி படம் வரவேற்பிலும் சரி வசூலிலும் சரி அடித்து தூக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X