பாசிட்டிவ் விமர்சனம்.. 2ம் நாளில் அதிகரித்த கைதி கலெக்‌ஷன்!

கார்த்தி நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கும் கைதி திரைப்படம் முதல் நாளை விட இரண்டாம் நாளான நேற்று அதிகளவில் வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு காரணம் கைதி திரைப்படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்ச

Recommended Video

Kaithi Box Office:குவியும் கூட்டம், அள்ளும் வசூல்

சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியான படம் கைதி.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வெளியான கைதி திரைப்படம், அனைத்து விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாள் வசூலை விட கைதி திரைப்படம் இரண்டாம் நாளில் அதிக வசூலை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

இந்த தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது. குறைந்த அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட கைதி திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 3.6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் வெள்ளியன்று 32 லட்சம் வசூலை அள்ளிய கைதி திரைப்படம் சனிக்கிழமை 37 லட்சம் வசூலை அள்ளியுள்ளது. இரண்டு நாள் வசூலாக மொத்தம் 69 லட்சம் வசூலை சென்னை பாக்ஸ் ஆபிஸில் கைதி வசூலித்துள்ளது.

உலகளவில் கைதி திரைப்படம் முதல் நாளில் 11 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் வசூல்

இரண்டாம் நாள் வசூல்

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கார்த்தியின் கைதி திரைப்படம் இரண்டாம் நாளான நேற்று உலகளவில் 14 கோடிகளை வசூல் செய்து, இதுவரை 25 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக் கிழமையான இன்று 20 கோடி வரை கூடுதலாக வசூலாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் இரண்டாம் நாள் 37 லட்சமும் தமிழ்நாடு அளவில் 4 முதல் 5 கோடி வரை கைதி வசூலித்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் கைதி படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் காட்சி

அதிகரிக்கும் காட்சி

இந்த தீபாவளிக்கு வெளியான கைதி படம் அனைத்து விதமான விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அனைத்து திரையரங்கிலும் கைதி திரைப்படத்திற்கான காட்சிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், வரும் நாட்களில் மேலும், வசூலை கைதி அள்ளுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாசிட்டிவ் விமர்சனம்

பாசிட்டிவ் விமர்சனம்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள கைதி திரைப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்துள்ளன. பெரிய நடிகர்களின் படங்களை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறனும் கார்த்தியின் கைதிக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X