twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதி ரீமேக்கிற்கு தடையா...நிரூபிக்க ஆதாரம் உண்டு...அடித்து சொல்லும் தயாரிப்பாளர்

    |

    சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆக்ஷன், த்ரில்லர் படம் கைதி. பாடல் , டூயட், ரொமான்ஸ், காதல், கவர்ச்சி என எதுவும் இல்லாமல் ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை சொல்வதாக எடுக்கப்பட்ட படம் இது.

    இந்த படம் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் மிகப் பெரிய பாராட்டை பெற்று தந்து, பிளாக் பஸ்டர் படமாக மாறியது. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் இணைந்து டிரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்தனர்.

    கமலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்கள்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த ப்ராமிஸ் கமலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்கள்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த ப்ராமிஸ்

    கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இதில் கார்த்தி ரோலில் அஜய் தேவ்கன் நடிக்க போவதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கைதி 2 படத்தை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    கைதி ரீமேக்கிற்கு இடைக்கால தடை

    கைதி ரீமேக்கிற்கு இடைக்கால தடை

    இந்நிலையில் கைதி படத்தை ரீமேக் செய்யவும், இரண்டாம் பாகத்தை தயாரிக்கவும் கேரள கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது. இது பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்து டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இன்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம்

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் விளக்கம்

    அதில், எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

    எங்களுக்கு அது பற்றி தெரியாது

    எங்களுக்கு அது பற்றி தெரியாது

    இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேவ்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது.

    எங்களிடம் ஆதாரம் உள்ளது

    எங்களிடம் ஆதாரம் உள்ளது

    அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    களங்கப்படுத்த வேண்டாம்

    களங்கப்படுத்த வேண்டாம்

    மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் :டக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    According to the official statement, the makers have confirmed that though they do not know the official details of the case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X