பிகிலை தொடர்ந்து தியேட்டர்களில் 100 நாட்களை கடந்த கைதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

By Staff

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியான கைதி திரைப்படம் 100 நாட்களை கடந்துள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கைதி.

Kaithi Crossed 100 days Mark fans are celebrating it

கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற கைதி சுமார் 100 கோடி வசூலை குவித்துள்ளது.

ஒரு இரவில் நடக்கும் கதை என்றாலும் அதனை பல டிவிஸ்ட் அண்ட் டர்ன் உடன் நமக்கு வழங்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஒரு அப்பா மகள் பாசம் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றும் கைதி போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி நமக்கு படமாக கொடுத்துள்ளார்.

குருதிப்புனல் படத்தை போன்று பாடல்கள் இல்லாமல் வெளியானது கைதி. இந்த படத்தில் லாரி டிரைவர் டில்லியாக நடித்த கார்த்தியின் நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

படத்தில் ப்ளஸ் பாயிண்ட் ஒளிப்பதிவு மற்றும் இசை என்றே சொல்லலாம். சத்ய சூரியனின் ஒளிப்பதிவு படம் பார்க்கும் பொழுதே நம்மை ஆச்சரியப்பட வைத்தது. பின்னணி இசையில் சாம் சி.எஸ் மிரட்டி இருப்பார்.

படத்தில் சண்டை காட்சிகள் அனைத்தும் வெறித்தனம் என்றே சொல்ல வேண்டும் அன்பறிவு மாஸ்டர் சண்டை காட்சிகளில் மிரட்டி உள்ளார். பிகில் படம் உடன் இப்படம் வெளி வந்தாலும் நல்ல வசூல் மற்றும் விமர்சனத்தை பெற்றது.

இப்படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் பல விருதுகளை பெற்றார். மற்றும் இதில் நடித்த அர்ஜுன் தாஸ் அடுத்து விஜய் உடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் கைதி செய்த சாதனை மற்றும் வசூல் எவராலும் மறக்க முடியாது. தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது கைதி தான்.

இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. இதனை பாலிவுட்டில் முன்னணி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்குவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் அனைவரையும் கைது செய்தது.

இன்று இப்படத்தின் 100வது நாளையொட்டி ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X