அர்ஜுன் தாஸ் வீட்டில் விசேஷம்?.. அவருக்கு நிச்சயதார்த்தமா?.. உண்மை என்ன?
சென்னை: கைதி படத்தில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அதனைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், அநீதி, போர், குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களில் பல சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அடுத்ததாக அவர் ஒன்ஸ்மோர் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல்கள் திரைத்துறையில் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது திரைப்படம் கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதில் வில்லனாக நடித்து அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். கட்டுமஸ்தான உடல், சூப்பரான நடிப்பு உள்ளிட்டவைகளால் ரசிகர்களை ஈர்க்க; அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலான படங்கள் ஒன்று சூப்பர் ஹிட்டாகின அல்லது மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. இதனால் கோலிவுட்டில் பிஸியான நடிகராகவும் மாறினார்.

ரகுவரனுக்கு அடுத்து: வில்லன்களுக்கு குரலும் முக்கியம் என்பதை முதன்முதலில் உணர்த்தியவர் ரகுவரன்தான். அவருக்கு பிறகு ரசிகர்களால் ஒரு வில்லனின் குரல் அதிகம் ரசிக்கப்படுவது என்றால் அது அர்ஜுன் தாஸுடைய குரல். கரகர குரலில் அவர் பேசுவதை கேட்கும்போது ஒரு சிங்கம் பேசுவது போல் இருக்கும் என புகழ்வார்கள். அவரும் படத்துக்கு படம் தன்னுடைய கெட்டப், நடிப்பு என பல விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்று குரலுக்கும் ஸ்பெஷல் கவனம் செலுத்துகிறார் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த படங்கள் என்ன?: கடைசியாக அவர் நடிப்பில் கும்கி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் ஒன்ஸ்மோர் என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். விரைவில் அது ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே அர்ஜுன் தாஸின் திறமை மற்ற மொழி திரைத்துறையிலும் எதிரொலித்ததன் காரணமாக தெலுங்கிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்த They Call Him OG என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காதல் கிசுசுசு: அர்ஜுன் தாஸை பொறுத்தவரை பெரிய அளவில் சர்ச்சைகள், கிசுகிசுக்களில் எல்லாம் சிக்காமல் வண்டியை நிதானமாக ஓட்டி வருகிறார். அப்படி இருந்தும் அவரும், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் காதலித்துவருகிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதனை சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். அதற்கு பிறகு சிங்கிளாக இருந்து தன்னுடைய கரியரில் முழு கவனத்தையும் செலுத்தினார். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது அர்ஜுன் தாஸுக்கு இந்த வாரத்தில் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும்; அதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொள்ளவிருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. அர்ஜுன் தாஸ் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் திரைத்துறையை சேர்ந்தவரா? இது காதல் திருமணமா? யார் அந்த பெண்? திருமணம் எப்போது நடக்கும் என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கூடிய விரைவில் அர்ஜுனிடமிருந்து முறையான விளக்கமும், பதிலும் வரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிச்சயதார்த்தம் என்று வெளியான தகவலே கிசுகிசுதான் என சொல்லி முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications
