twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதி: தனித்துவமான கதைக்களம் கொண்டாடும் சினிமா ரசிகர்கள்

    |

    Recommended Video

    Kaithi Box Office : கைதி படத்தின் முதல் வார வசூல் தொகை-வீடியோ

    சென்னை: கார்த்தி நடித்துள்ள கைதி படம் முழுக்க முழுக்க ஒரு இரவில் நடைபெறும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தீபாவளிக்கு இந்த படம் வெளியானாலும், அதன் தனித்துவமான சிறப்பான கதைக்களம் ரசிகர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. ஒரு இரவில் நடக்கக்கூடிய சம்பவத்தை எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளன. அந்த வகையில் வெளியாகியுள்ள கைதி திரைப்படம் மிகச்சிறந்த ஒன்றாகும்.

    ஊடங்களாலும் மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு ட்ரெண்ட் செட்டிங் திரைப்படமாக அமைந்துள்ளது கைதி. தீபாவளிக்கு வெளியான கைதி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஊடகங்கள் அனைத்துமே கைதி படத்தை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம், அது ஒரு தூய்மையான எந்த ஒரு கலப்படமும் இல்லாத ஜானர் கொண்ட கதை என்பதால் தான்.

    கைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலாகைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா

    அசுரன் தொடங்கி கைதி வரை

    அசுரன் தொடங்கி கைதி வரை

    தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அக்டோபர் 4ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தை எப்படி மக்களும் ஊடகங்களும் கொண்டாடி வந்தார்களோ அதே போன்ற வரவேற்பு கைதி திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளது.

    மகளுக்காக பாச போராட்டம்

    மகளுக்காக பாச போராட்டம்

    அசுரன் திரைப்படம் ஒரு தந்தை தனது மகனை காப்பாற்ற போராடுவதை மிகவும் அழகாக வெளிப்படுத்தியது. கைதி திரைப்படம் ஒரு தந்தை தனது மகளை 10 வருடங்கள் கழித்து சந்திக்க வரும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றின கதை. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவை எடுத்துக்கொண்டால் கலப்படம் இல்லாமல் எந்த ஒரு படமும் இருக்காது.

    ஆக்சன் திரில்லர்

    ஆக்சன் திரில்லர்

    உதாரணத்திற்கு ரொமான்ஸ் கலந்த காமெடி அல்லது திரில்லர் கலந்த காமெடி திரைப்படம் என பெரும்பாலும் ஏதாவது கலவையோடு தான் படங்கள் வெளியாகின்றன. ஆனால், கைதி திரைப்படம் முழுக்க ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் மட்டுமே. இதில் ரொமான்ஸ், காமெடி என எந்த ஒரு கலவையும் இல்லாத முழுமையான தூய்மையான ஜானர் திரைப்படமாக கைதி திரைப்படம் அமைத்துள்ளது.

    படம் முழுக்க கார்த்தி

    படம் முழுக்க கார்த்தி

    ஹீரோயின் இல்லாமல் தமிழ் படங்களே இல்லை எனலாம். தேவையோ இல்லையோ பெயரளவிற்காகவாவது, ஹீரோயின்கள் நிச்சயம் படங்களில் இருப்பர். அவர்களுக்கென்று ஒரு நான்கு காட்சிகள் திணிக்கப்படும். ஆனால் கைதி திரைப்படத்தில் ஹீரோயின் இல்லாமல் அதற்கான அவசியமும் இல்லாமல் படம் முழுவதிலும் ஹீரோ மட்டுமே பயணிப்பது இப்படத்தின் சிறப்பு.

    அளவான காமெடி

    அளவான காமெடி

    தமிழ் சினிமாவில் காமெடி என்பது தவிர்க்க முடியாத ஒரு அம்சம். ஆனால் கைதி திரைப்படத்தில் மருந்துக்கு தேவைப்படும் அளவு மட்டுமே காமெடி செய்துள்ளார்கள். சிரிக்க வைப்பது போன்ற காட்சிகள் ஹீரோ கார்த்தி மற்றும் தீனா எங்கு தேவையோ அங்கு மட்டுமே பயன்படுத்தி உள்ளார்கள். பார்வையாளர்களின் கவனம் திரையை தவிர வேறு எங்கும் செல்லாதபடி உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

    பாடல்கள் இல்லாத படம்

    பாடல்கள் இல்லாத படம்

    படத்தில் பாடல்களுக்கு அவசியமே இல்லை எனலாம். அவ்வாறு பாடல்கள் திணிக்கப்பட்டிருந்தாலும் கூட அவை தனியே தெரிந்திருக்கும். அதை நன்கு உணர்ந்தே இயக்குநரும் திணிக்கவும் இல்லை. 2 மணிநேரம் 20 நிமிடங்களும் நம்மை கைதி சிறைப்படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். இது மற்றுமொரு சிறப்பு.

    ஹீரோவின் பயணம்

    ஹீரோவின் பயணம்

    தமிழ் சினிமாவில் சப் லாட் (SUB PLOT) அல்லது ஃபிளாஷ் பேக் இல்லாமல் இருக்காது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணி கதை, ஹீரோவுக்கு ஒரு ஃபிளாஷ் பேக் என்று நிச்சயம் இருக்கும். ஆனால் இப்படத்தில் அது போன்ற அம்சம் ஏதும் இல்லாமல் படம் முழுவதும் ஒரு ஹீரோவின் பயணத்தை வெகு சிறப்பாக காட்டியுள்ளார் லோகேஷ்.

    ஒரே நாள் இரவு

    ஒரே நாள் இரவு

    ஒரு இரவில் நடக்கக்கூடிய சம்பவத்தை எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளன. ஏ.நாகேஸ்வர ராவ், டி.எஸ்.பாலையா நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த, ஓர் இரவு திரைப்படம் மற்றும் அதை தொடர்ந்து பல திரைப்படங்கள் இது போல வெளியாகியுள்ளன. அதில் ஒன்று ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம். அந்த வகையில் வெளியாகியுள்ள கைதி திரைப்படம் மிகச்சிறந்த ஒன்று.

    கார்த்தியின் நடிப்பு

    கார்த்தியின் நடிப்பு

    இப்படத்தில் கார்த்தியின் நடிப்பு அபாரம். அவரின் திரையுலக வரலாற்றில் இது நிச்சயம் ஒரு சிறந்த திரைப்படமாக மட்டுமல்லாமல் மணிமகுடமாகவும் இருக்கும். அதே போல ஸ்பெஷல் காவல் அதிகாரியாக நடித்துள்ள நரேனிற்கும் இப்படம் ஒரு சிறந்த மறுபிரவேசமாக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.
    இரவில் படப்பிடிப்பு நடத்த மிகவும் சிறந்த ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். தொடர்ந்து 60 நாட்கள் இரவில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி வெகு சிறப்பாக பணியாற்றியுள்ளார் சத்யன் சூரியன். இவருக்கும் இப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    சண்டை காட்சிகள்

    சண்டை காட்சிகள்

    அடுத்து இப்படத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றவர்கள் அன்பறிவு. இவர்களின் ஆக்ஷன் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் அற்புதமாக ரீயலிஸ்ட்டிக்காக அமைக்கப்பட்டுள்து. எதார்த்தமான ஆக்ஷன் காட்சிகள் மூலம் ஸ்கோர் செய்துள்ளார் அன்பறிவு. இதற்காக அவர்களுக்கு பல விருதுகள் வரிசை கட்டி காத்திருக்கின்றன.

    இசை சாம்

    இசை சாம்

    ஒரு இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் பார்வையாளர்களுக்கு அலுப்பு தட்டி விடும். ஆனால் ஒரு நிமிடம் கூட நம்மை சலிப்படைய செய்யாமல் படத்தை மிகவும் கிரிஸ்ப்பாக எடிட்டிங் செய்துள்ளார் பிலிமினராஜ். அவருக்கு பாராட்டுக்கள். விக்ரம் வேதா திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக பின்னணி இசையமைத்த சாம் கைதி திரைப்படத்திற்கும் சிறப்பாக பின்னணி இசை அமைத்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து, படம் பார்க்கும் அனைவரையும் அந்த்ப்பக்கம், இந்தப்பக்கம் என நகரவிடாமல், அடுத்த கட்டத்திற்கு படத்தை நகர்த்தியுள்ளது.

    லோகேஸ் கனகராஜ்

    லோகேஸ் கனகராஜ்

    மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி 2 வருடங்கள் இடைவேளைக்கு பிறகு 60 நாட்கள் கடுமையாக உழைத்து சிறப்பாக படைத்துள்ளார். இளைய தலைமுறை இயக்குநர்களில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க ஒப்புக்கொண்ட போது, பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் லோகேஷ் கைதி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு தான் ஒரு திறமையான கமர்சியல் இயக்குநர் என நிரூபித்துள்ளார். அவரது எழுத்தும், இயக்கமும், தனக்கு முன்னணி இயக்குநர் ஆக தகுதி உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர்.பிரபுவிற்கு வாழ்த்துக்கள். கார்த்தியை வைத்து அவர்கள் தயாரித்துள்ள இரண்டாவது திரைப்படம் கைதி. தீபாவளிக்கு ஒரு மிகச்சிறந்த படத்தை கொடுத்து அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

    ரசிகர்களின் ஆதரவு

    ரசிகர்களின் ஆதரவு

    பிகில் திரைப்படத்தோடு போட்டியிட்டு கைதி திரைப்படம் தீபாவளிக்கு வெளியானாலும், அதன் தனித்துவமான தூய்மையான கதைக்களம் மூலம் மக்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகம், ஆந்திர என பல மாநிலங்களிலும் இப்படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இது போன்ற ஒரு திரைப்படத்தை பார்த்ததில்லை என்று ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறார்கள். ஹாலிவுட் படத்தின் தரத்திற்கு இப்படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட் செய்துள்ளார்கள்.

    கைதி 2

    வசூல் ரீதியாகவும், மக்களாலும், ஊடகங்களாலும் கொண்டாடப்படும் இந்த திரைப்படத்திற்கும் அதன் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள். இப்படம் நிச்சயம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அதையும் நாம் கூடிய விரைவில் கண்டு ரசிக்கலாம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி இருவரின் இணைப்பில் கைதி பார்ட் 2 படம் கூடிய விரைவில் உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அதுவும் நிச்சயம் வரவேற்கப்படும்.

    English summary
    The film Kaithi was taken as the focus of the entire night. Though the film is released on Diwali, it has gained popularity through its unique pure storyline.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X