கைதி ரிலீஸ் ஆயிட்டார்… பெரிய லெவல்ல பிரபலம் ஆயிட்டேன் நான்.
சென்னை: கைதி திரைப்படம் வசூலில் வாரி குவித்து வருகிறது. வெளியான அடுத்த நாளே மக்கள் மனதில் கைதி படத்தை நிச்சயம் பார்த்து விட வேண்டும் என்ற பேச்சு அடிபடுகிறது. படம் பார்க்கும் ஒவ்வொருத்தரும் கிளைமாக்ஸ் சீன் பார்க்க வேண்டும் என்று படு ஆர்வமாக இருப்பர் அதற்கு காரணம் விறுவிறுப்பும் சுவாரசியமும் தான். அனால் இந்த படத்தின் முதல் காட்சியே கிளைமாக்ஸ் போல ஆர்வத்தை தூண்டுகிறது. அங்கு ஆரம்பிக்கும் ஆர்வம் அடுத்தது என்ன என்ன என்று நம்மை யோசிக்கவைக்கும் அளவிற்கு படு த்ரில்லிங்காக கையாண்டுள்ளார் இயக்குனர்.
இதில் கார்த்தி, நரேன், மட்டும் பலர் நடித்து உள்ளர் , கார்த்தியின் மகளாக வரும் அந்த சிறிய பெண் குழந்தை பலரை பற்றியும் அவர்ளின் நடிப்பை பற்றியும் பல பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. அப்படி இருக்கையில் மிகவும் முக்கியமான மற்றுமொரு கதாபாத்திரம் விஜய் தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தீனா, காமாட்சி என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்துள்ளார். சில படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இந்த படத்தின் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தீனா. இவர் ஒரு மிமிகிரி ஆர்ட்டிஸ்ட் என்பது நாம் அறிந்த விஷயம். கைதி படத்தில் தீனா ஒப்பந்தம் ஆனதற்கு முக்கிய காரணம் அவரின் குரல். இப்படத்தில் இயக்குனர் தீனாவை ஒரு வித்யாசமான எமோஷனல் குரலுக்காகவும் புது விதமான ஸ்லாங்கிற்காகவும் பயன்படுத்தியுள்ளார். இது புது விதமாக அமைந்துள்ளது. கிடைத்த வாய்ப்பை வெகு சிறப்பாக பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் தீனா.

தீனாவின் பிளஸ் அவரது நகைச்சுவை ஆனால் இந்த கைதி திரைப்படத்தில் அவரை வேறு ஒரு வித்யாசமான கதாபாத்திரமாக பயன்படுத்தி அவர் திறமையை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுள்ளர் இயக்குனர். வளரும் நல்ல நடிகர்களுக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் ஷேர் செய்வதில் கார்த்தியை பாராட்டியே ஆக வேண்டும் . நல்ல அழுத்தமான வசனங்களை தீணாவை பேசவிட்டு அழகு பார்த்து உள்ளார்.

மற்ற திரைப்படங்களை விடவும் இப்படம் சற்று வித்தியாசமானது. இயக்குனரின் டார்க் பிலிம் எடுக்கும் ஆசை இப்படம் மூலம் நிறைவேறியுள்ளது. பிகில் மற்றும் கைதி திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாவதில் சந்தோஷம். அதில் நானும் ஒரு பங்காக இருந்துள்ளேன் என்று நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் தீனா. ஆல் தி பெஸ்ட் தீனா.


Click it and Unblock the Notifications











