twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதி படத்திற்கு முதலில் ஹீரோவாக தேர்வானவர் மன்சூர் அலிகான் தான்

    |

    சென்னை : மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் தான் கைதி. லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்த இயக்குனர். மாநகரம் சம்மந்தமே இல்லாமல் சந்திக்கும் மணிதர்கள் அவர்களுக்கு நடக்கும் பிரச்சினை,அது எங்கு தொடங்கியது ஏன் அவர்கள் அந்த பிரச்சினை குள் சிக்கினார்கள் என்று மாநகரம் படம் மிக சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும். பல இடங்களில் லோகேஷ் கனகராஜ் சொன்னது எனக்கு படத்தின் இறுதியே முதலில் கதைகருவாய் கிடைத்தது என்றும் அதை வைத்தே படத்தின் திரைக்கதையை நான் உருவாக்கினேன் என்றும் கூறியிருந்தார் . அதே போல் கைதி பட கதையும் படஇறுதி தான் முதலில் கிடைத்தது அதை வைத்தே மொத்த கதையையும் உருவாக்கினேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ்.கைதி பட கதைகரு முதலில் ஒரு செய்திதாளில் இருந்து தான் கடைத்தது ஆனால் தற்போது உருவாகி இருக்கும் கதைக்கும் அந்த செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ,கதை உருவாக அந்த ஒரு செய்தியே காரணம்,அது என்ன செய்தி என்று தான் படம் ரிலீஸ்க்கு பின் கூறுவதாக லோகேஷ் சொல்லிருந்தார்

    Kaithi movie - actual hero was Mansoor ali khan in Directors mind.

    தற்போது கைதி படத்தில் கார்த்தி நடித்து படம் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது.பல மக்களும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து வருகின்றனர். கைதி படத்திற்கு முதலில் மன்சூர் அலிகானை தான் நினைத்து கதையை உருவாக்கியதாக கூறியிருக்கிறார் லோகேஷ் ,மன்சூர் அலிகானின் தெனாவட்டு பேச்சுகளும் மற்றும் சில விசயங்களும் கைதி பட கதாபாத்திரத்துக்கு சரியாக இருக்கும் என தான் எண்ணியதாகவும் ,அதற்கு பிறகு கதை பெரிதாக உருவாக உருவாக கார்த்தி இந்த படத்தில் இனைந்ததாகவும் அதற்கு பின் கைதி கார்த்தி படமாக மாறியது என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

    மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் - எடுத்த முயற்ச்சி மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறது , இவை அனைத்திற்கும் மிக மிக முக்கிய காரணம் இப்படி பட்ட கதையை சரியான முறையில் ஊக்குவித்த எஸ் .ஆர் பிரபு என்னும் மிக சிறந்த தயாரிப்பாளரை பாராட்டியே ஆகவேண்டும்.

    லோகேஷ் கனகராஜ் தற்போது கைதி படத்திற்கு பிறகு தளபதி விஜயின் 64வது படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை தயாரித்து வருகின்றனர் சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ்.பி .பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம்.
    மீண்டும் லோகேஷ் - எஸ் ஆர் பிரபு கூட்டணியில் கைதி இரண்டாம் பாகம் வர இருக்கிறது ஒரு சிறப்பான தகவல்.

    English summary
    Actual hero of Kaithi movie was mansoor ali khan in directors mind , then situations changed and mass hero karthi was fit and made the script more versatile in his style.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X