twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பின்னடைவை சந்திக்கும் பிகில்.. தெலுங்கிலும் செம டஃப்.. தொடர்ந்து கல்லாவை நிரப்பும் கைதி!

    |

    Recommended Video

    Kaithi Box Office : கைதி படத்தின் முதல் வார வசூல் தொகை-வீடியோ

    சென்னை: கைதி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படக்குழு செம ஜாலி மூடில் உள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் தமிழகத்தில் முதல் நாளன்று 300க்கும் குறைவான தியேட்டர்களிலேயே ரிலீசானது. ஆனால், தற்போது படம் குறித்து நல்ல மாதிரியான விமர்சனங்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளன.

    5ஆம் நாளில் பிகிலை வீழ்த்தி விரட்டியடித்த கைதி .. அமெரிக்காவில் அள்ளியிருக்க வசூலை பாருங்க!5ஆம் நாளில் பிகிலை வீழ்த்தி விரட்டியடித்த கைதி .. அமெரிக்காவில் அள்ளியிருக்க வசூலை பாருங்க!

    புலம்பும் மக்கள்

    புலம்பும் மக்கள்

    இதனால் தியேட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பட்டு வருகிறது. இருப்பினும் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை மக்கள் புலம்பி வருகின்றனர்.

    ரிலீஸ்க்கு முன்பே

    ரிலீஸ்க்கு முன்பே

    கைதி படம் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 51 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் படம் ரிலீஸாவதற்கு முன்பே அக்கவுன்ட்டை தொடங்கிவிட்டது.

    இரட்டிப்பு வசூல்

    இரட்டிப்பு வசூல்

    கடந்த 5 நாட்களாக கைதி படத்தின் வசூல் படிபடியாக அதிகரித்து வருகிறது. கைதி படம் முதல் நாளைக் காட்டிலும் கடந்த நாட்களில் இரட்டிப்பு வசூலைக் கண்டுள்ளது.

    ரூ.20 கோடி வசூல்

    ரூ.20 கோடி வசூல்

    ஐந்தாம் நாளான நேற்று கைதி படம் தமிழகத்தில் 4.15 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகல்வவெளியாகியுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் கைதி படம் தமிழகத்தில் 20 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

    அரங்கம் நிறைந்த காட்சிகள்

    அரங்கம் நிறைந்த காட்சிகள்

    இதேபோல் கேராள மற்றும் தெலுங்கு மாநிலங்களிலும் கைதி படம் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக உள்ளது. வசூலையும் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Kaithi movie collection increasing day by day in Tamilnadu Box office. Kaithi movie goes up in Telugu states and Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X