இங்க மட்டும் இல்லீங்க.. அங்கேயும் ஹவுஸ்ஃபுல்தானாம்.. வெளுத்துக்கட்டும் கைதி!

Recommended Video

KAITHI REVIEW BY POSTER PAKIRI | KARTHI | NAREN | SR PRABHU | FILMIBEAT TAMIL

சென்னை: கைதி படம் தமிழத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் ஹவுஸ்ஃபுல்லாகி வருகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கைதி. விஜய்- அட்லீ- ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவான பிகில் படத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால், கைதி படத்துக்கு தமிழகத்தில் மிகக் குறைந்தளவு தியேட்டர்களே ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் படம் பிகிலை பின்னுக்குதள்ளி ரேஸில் தாறுமாறாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிகில் படத்திற்கான காட்சிகள் குறைக்கப்பட்டு கைதி படத்தின் ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

சென்னையில் கூடுதல்

சென்னையில் கூடுதல்

சென்னையில் 30% திரையரங்குகளில் இன்று முதல் கூடுதலாக கைதி படம் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் கைதி திரைப்படம் ஓடும் அத்தனை தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்லாகி வருகிறது.

கேரளாவில் ஹவுஸ்ஃபுல்

கேரளாவில் ஹவுஸ்ஃபுல்

இந்நிலையில் கேரளாவில் கைதி திரைப்படம் ஓடும் திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக கேரளாவில் உள்ள ரசிகர்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கைதி ஷோஸ்

கேரளாவில் கைதிக்கான அனைத்து ஷோக்களும் ஹவுஸ்ஃபுல் என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.

கைதி ஹவுஸ்ஃபுல்

கேரளாவில் உள்ள கசராகாட் மெஹ்பூப் தியேட்டரிலும் கைதி படம் ஹவுஸ்ஃபுல் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X