கார்த்தியின் கைதி ரசிகர்களை நிச்சயம் கவரும் - லோகேஷ் கனகராஜ்

சென்னை: கைதி படத்தில் முதலில் மன்சூர் அலிகானை வைத்து எடுக்க திட்டமிட்டேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதால் பெரிய ஹீரோவை வைத்து எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கார்த்தியை அணுகினோம். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி இதுவரையில் நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் களம் இறங்கியுள்ளார். கைதி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட படம்.

Kaithi Movie Press Meet

ஒரு நான்கு ஐந்து மணி நேரத்திற்குள் நடைபெறும் சம்பவம் தான் கைதி படத்தின் மையக் கதை. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நடிகர் கார்த்தி பல நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பின்னரே இப்படம் எடுக்கப்பட்டது. இது சாத்தியம் ஆனதற்கு முக்கிய காரணம் கார்த்தி தான். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இது நடந்திருக்க முடியாது என்றார்.

Kaithi Movie Press Meet

இப்படத்தில் ஹீரோயின் இல்லை என்பதை விட அதற்கு அவசியமில்லை. படம் வெறும் 4 மணி நேர இடைவெளியில் நடைபெறும் கதை என்பதால் அதற்கு ஹீரோயின் தேவைப்படவில்லை. அதனால் படம் முழுக்க முழுக்க கார்த்தியை சுற்றியே நகரும்.

கார்த்தி ஆக்ஷன், சோகம், மாஸ் என அனைத்து எமோஷன்களையும் இப்படத்தில் வெகு சிறப்பாக கையாண்டுள்ளார். இப்படத்தில் கார்த்தி ஒரு முழு ஹீரோவாக நடித்துள்ளார். ஒரே இரவில் எடுக்கப்பட்டது என்பதால் ஒரே உடை அணிந்து நடிப்பதற்கும் ஒத்துக்கொண்டார். இது போல பல விஷயங்களுக்கு ஒத்துக்கொண்டு நடித்தார் கார்த்தி.

படத்தில் கார்த்தியின் கெட்டப் பருத்தி வீரன் போல் தோற்றம் இருக்கக் கூடாது என்று முயற்சித்தாலும் அந்த கதாபாத்திரம் நம் மனதில் பதிந்து விட்டதால் நமக்கு பருத்தி வீரன் போலவே தெரிகிறார்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு தான் அதில் ஹீரோயின் இல்லை, பாடல்கள் இல்லை என்ற எண்ணமே தோன்றும். அந்த அளவிற்கு படத்தின் கதையோடு பார்வையாளர்கள் ஒன்றி போய் விடுவர் என்றார் இயக்குனர். நான் இரவு பிரியர் எல்லாம் கிடையாது. படத்திற்கு அது தேவைப்பட்டதால் இரவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

Kaithi Movie Press Meet

இப்படத்தின் கதையைப் பற்றி யோசித்த போது முதலில் இதை மன்சூர் அலிகானை வைத்து எடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்திருந்தேன். ஆனால் இப்படம் பெரும் பட்ஜெட் படம் என்பதால், தேவைப்பட்டால் ஒரு பெரிய ஹீரோவை வைத்து எடுக்க வேண்டும் என்ற நோக்கில் கார்த்தியை அணுகினோம். அவரும் உடனே ஒப்புக்கொண்டார்.

படம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே கைதியாய் இருந்து இரண்டு மூன்று பேரை சந்தித்து அவர்களிடம் எனக்கு தேவையானவற்றை கேட்டு தெரிந்து கொண்டேன் என்றார் லோகேஷ் கனகராஜ்.

மேலும் அவர் கூறுகையில், தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் நான் யாருடனும் போட்டியிட வேண்டும் என்று நினைக்கவில்லை. அனைவரது படமும் வெற்றியடைய வேண்டும். அனைவரும் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவு தான். இதில் போட்டியே கிடையாது.

இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் இதற்கு நிச்சயம் U சான்றிதழ் கிடைக்காது U/A சான்றிதழ் தான் கிடைக்கும் என்று ஏற்கனவே தெரியும் என்றார். எனவே ஒரு முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமான இது நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் என்று நம்புகின்றனர் படக்குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X