வேற லெவல்.. அந்த படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. உச்சகட்ட சந்தோஷத்தில் மாஸ்டர் இயக்குநர்!

சென்னை: கைதி திரைப்படம், டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

Recommended Video

Anchor DD & Priyanka Great gesture of Humanity | Dheena Thanking Video

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கைதி.
இந்த படத்தில் ஆயுள் தண்டனை கைதியாகவும், லாரி டிரைவராகவும் டில்லி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து மிரட்டி இருந்தார்.

தெறிக்கவிட்ட கைதி

தெறிக்கவிட்ட கைதி

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார்த்தி நடிப்பில் ரிலீசான படம் கைதி. தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் கரண் ஜோஹர் உள்ளிட்ட பல பிரபலங்களின் பாராட்டுக்களை அள்ளி தியேட்டர்களை வசூல் மழையால் தெறிக்கவிட்ட படம் கைதி. சீட் எட்ஜ் த்ரில்லர் என்பதற்கு மிகச் சரியான படமாக இருந்தது.

ஹீரோயின் இல்லை

ஹீரோயின் இல்லை

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கைதி படத்தை வெறும் இரவில் மட்டுமே, அதுவும் லாரி ஹெட்லைட் வெளிச்சத்திலேயே வைத்து ஷூட் செய்தார். மேலும், இந்த படத்தில் ஹீரோயின், பாடல்கள் என எதுவுமே இல்லாமல், ஒரு பக்காவான ஹாலிவுட் படம் போல, பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் கதையாக இந்த படம் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது.

சர்வதேச அங்கீகாரம்

சர்வதேச அங்கீகாரம்

பாலிவுட் பிரபலங்களின் பாராட்டுக்களை அள்ளிய கைதி திரைப்படம், பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட கைதி திரைப்படம் தேர்வாகி உள்ளது. வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை திரையிடப்படும் என்கிற சந்தோஷத்தை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

கைதி 2

கைதி 2

கைதி படத்தின் அசுரத்தனமான வெற்றி, அதன் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்களை மிகவும் ஆர்வமுடம் எதிர்பார்க்க வைத்திருக்கிறது. வெறும் 30 நாள் கால்ஷீட் கொடுத்தாலே கைதி 2வை எடுத்து விடுவேன் என நடிகர் கார்த்தியிடம் லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் லைவ்வில் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நினைவுப்படுத்தி கைதி 2ம் பாகத்திற்கு அடிபோட்டு வருகின்றனர் கார்த்தி ரசிகர்கள்.

விஜய் ரசிகர்கள் ரகளை

விஜய் ரசிகர்கள் ரகளை

லோகேஷ் கனகராஜின் ட்வீட் நோடிபிகேஷனை பார்த்து, மாஸ்டர் படத்தின் அப்டேட் தான் வந்துவிட்டது என அலறி அடித்து ஓடி வந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. மேலும், மாஸ்டர் படத்தின் டீசர், டிரைலரையாவது விடுங்க, அடுத்த அப்டேட் கொடுங்க, விஜய் பிறந்தநாள் அன்றும் ஏமாற்றிவிட்டீர்கள் என ரசிகர்கள் அன்புத் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X