கார்த்தி காட்டுல மழைதான்.. இவ்வளவு வேகமா படம் முடிஞ்சிட்டா.. ரஜினிக்கு காத்திருக்கும் சிக்கல்!
நடிகர் கார்த்தி நடிக்கும் பெயர் இடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிந்துள்ளது.
சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கும் பெயர் இடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிந்துள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
நடிகர் கார்த்தி காட்டில் தற்போது மழை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் வரிசையாக நல்ல நல்ல கதை உள்ள படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் நடிப்பில் கைதி படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. மாநகரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் இரண்டாவது படமாகும் இது.

சிறப்பு
இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. படத்தின் டீசர் பலரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கைதி படம், விஜயின் பிகில் படத்துடன் போட்டி போடுகிறது. பிகில் படமும், கைதி படமும் தீபாவளி அன்று வெளியாகிறது.

அடுத்து என்ன
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் பெயர் இடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிந்துள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

யார் படம்
இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இவர்தான் திரிஷ்யம், பாபநாசம், ஊலம், மெமரிஸ் ஆகிய ஹிட் படங்களை இயக்கினார். இவர் திரில்லர் ஜானர் படங்களை எடுப்பதில் வல்லவர்.

செம திரில்லர்
அதேபோல்தான் தற்போது கார்த்தி நடித்த படமும் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி உடன் அவரின் அண்ணி, நடிகை ஜோதிகா நடிக்கிறார். இதில் இவர்கள் இருவரும் அக்கா தம்பி பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

பல்வேறு பேர்
அதேபோல் இதில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். சத்யராஜ் இதில் கார்த்தியின் அப்பா பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சவுக்கார் ஜானகி, அம்மு அபிராமி, அன்சான் பால், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரிலீஸ்
இந்த படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதேபோல் பொங்கல் அன்று நடிகர் ரஜினிகாந்த் நடித்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படமும் வெளியாக உள்ளது. ரஜினி படம் தனியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு போட்டியாக இன்னொரு பெரிய படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











