இது வேற லெவல் வெற்றி.. வைரலாகும் கைதி சக்சஸ்மீட் புகைப்படங்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல கலெக்ஷனை அள்ளி வருகிறது.
ஐதராபாத்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளியன்று கைதி திரைப்படம் வெளியானது.
தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவிலும் கார்த்தியின் கைதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் கைதி வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் புகைப்படங்களை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

லாரி டிரைவர்
கைதி படத்தில் ஆயுள் கைதியாக நடித்துள்ள கார்த்தி, காவல்துறை அதிகாரி நரேனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற லாரி ஓட்டுவார். லாரி ஓட்டும் ஷூட்டிங்கின் போதுதான், லாரி டிரைவர்கள் எந்த அளவுக்கு கஷ்டங்களையும் சவால்களையும் தங்கள் வாழ்வில் சந்திக்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டதாக கூறியுள்ளார்.

கைதி 2
கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி என்றால் அது கைதி 2 படம் வருமா என்பது தான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் விரைவில் கைதி 2 வரும் என்றும் கூறி வருகின்றனர். ஐதராபாத்தில் நடைபெற்ற வெற்றிவிழா கொண்டாட்டத்திலும், ரசிகர்கள் கார்த்தியிடம் இதே கேள்வியை முன்வைக்க நிச்சயம் வரும் என்று கூறியுள்ளார்.

தெலுங்கிலும் வசூல் வேட்டை
விஜய்யின் பிகில் படத்தை போலவே கார்த்தியின் கைதி படமும் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசானது. இதுவரை இல்லாத அளவிற்கு கைதி படத்தின் மூலம் நடிகர் கார்த்திக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். கைதி படம் தெலுங்கிலும் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இயக்குநர் எங்கே?
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கைதி சக்சஸ் மீட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். ஆனால், அந்த புகைப்படங்களில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் நாயகன் கார்த்தி மட்டுமே இருக்கின்றனர். படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இல்லை. தளபதி 64 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால், லோகேஷ் கனகராஜ் இந்த சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளவில்லை என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











