ஒரே இரவு.. கார்த்திக்கு காத்திருக்கும் சோதனை.. வெளியான சீக்ரெட்டால் கைதி படக்குழு அதிர்ச்சி!

நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் முக்கிய சீக்ரெட் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் முக்கிய சீக்ரெட் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் நடிப்பில் கைதி படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. மாநகரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் இரண்டாவது படமாகும் இது.

இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. படத்தின் டீசர் பலரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி

போட்டி

லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தை விஜய்க்காக இயக்குகிறார். அதே சமயம் அவரின் இந்த கைதி படம், விஜயின் பிகில் படத்துடன் போட்டி போடுகிறது. பிகில் படமும், கைதி படமும் தீபாவளி அன்று வெளியாகிறது.

முக்கிய விஷயம்

முக்கிய விஷயம்

இந்த நிலையில் கைதி படத்தின் முக்கிய இரகசியங்கள் இணையத்தில் கசிந்து உள்ளது. கார்த்தி இந்த படத்தில் கைதியாக இருப்பார். ஒரு இரவு முழுக்க போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடாது. அப்போது அந்த இரவில் கைதியாக இருக்கும் கார்த்தி என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள்.

காடு உள்ளே

காடு உள்ளே

இந்த படத்தின் கதையில் இரண்டாம் பாதி முழுக்க காட்டிற்குள் நடக்கும் என்று கூறுகிறார்கள். அதேபோல் இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. நரேனின் போலீஸ் வேடம் இதில் முக்கிய திருப்பமாக இருக்கும் என்கிறார்கள்.

அட ஆமாம்

அட ஆமாம்

இந்த கதையின் ஒன் லைனை கேட்பவர்களுக்கு ஹாலிவுட் படங்களில் வரும், பர்ஜ் (purge) வகை படங்கள் நினைவிற்கு வரலாம். அதில்தான் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு இரவு முழுக்க சட்டம் செயல்படாது என்று கூறிவிட்டு, வன்முறையை உருவாக்குவார்கள்.

நிறைய

நிறைய

இந்த கருவை கொண்டு ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை இதுபோன்ற படங்கள் மிகவும் திரில்லாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்தான் கைதி கதையும் இருக்கும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X