வாவ்.. நவம்பர் 25ம் தேதி கைதி எங்க ரிலீசாகுது தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் உருவான கைதி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியானது.
தமிழ்நாட்டில் சுமார் 50 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை நெருங்கியுள்ள கைதி திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கைதி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெற்றுள்ள ஹாட்ஸ்டார் நிறுவனம் வரும் நவம்பர் 25ம் தேதி கைதி படத்தை ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளியிடுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் வெளியான கைதி திரைப்படம் ஒரே மாதத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் அமேசான் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
கைதி திரைப்படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வரும் நிலையில், வரும் நவம்பர் 25ம் தேதி ஆன்லைனிலும் டில்லியின் ஆக்ஷன் அதிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கைதியின் தெலுங்கு வெர்ஷன் ஹாட்ஸ்டாரில் ப்ரீமியம் ரிலீசாவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
தமிழ்நாட்டில் ஓடுவதை போலவே கார்த்தியின் கைதி திரைப்படம் தெலுங்கிலும் பிளாக்பஸ்டர் படமாக 3வது வாரத்திலும் ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











