கார்த்தியின் கைதி ட்ரெய்லர் ரிலீஸ் : சாவுறதா இருந்தாலும் சண்டை போட்டுதான் சாகணும்

சென்னை: நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் அதிக அளவில் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்திருக்கும் படம் கைதி. இந்த படம் வரும் தீபாவளியன்று விஜய்யின் பிகில் படத்துடன் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் விஜய்யின் அடுத்த பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. கைதி படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.

Kaithi Trailer released

ட்ரைலரில் கார்த்தி, நரேன், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக காட்டப்பட்டுள்ளனர். கதை ஒரு கைதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க இரவில் படமாக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

Kaithi Trailer released

அதுமட்டுமின்றி, இந்த படத்திற்கு கதாநாயகி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இப்படத்தில் பவர் பாண்டி, தும்பா படங்களில் நடித்த தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் யுத்தம் செய், மாயா, அடங்கமறு, தீரன் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

கார்த்தி கடைசியாக தேவ் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஜோடி நடித்த முந்தைய படமான தீரன் அதிகாரம் ஒன்று படம் அபார வெற்றி பெற்றது. அதே கெமிஸ்ட்ரியை தேவ் படத்திலும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Kaithi Trailer released

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக தேவ் படம் அமைந்ததால், படம் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அதை உணர்ந்தே, நடிகர் கார்த்தி இந்த படத்திற்கு அதிக சிரத்தை எடுத்து, பல இடங்களில் நடிப்பில் பின்னி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Kaithi Trailer released

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய மாநகரம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. அதே நேரத்தில் கைதி பட ட்ரைலர், படத்தின் மீதான நம்பிக்கையையும் அதன் மீதான எதிர்பார்பையும் அதிகரித்துள்ளது. அதோடு இயக்குநர் லோகேஷின் அடுத்த பட ஹீரோ தளபதி விஜய் என்பதனால் டாக் ஆப் த டவுனாக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X