தளபதி 64ல் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்.. அதுக்குத்தான் இந்த அட்ஜெஸ்ட்மென்ட்?

சென்னை: 'தளபதி 64' படத்தில் ஏற்கனவே நடிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கின்ற நிலையில், இன்னொரு கூடுதல் இணைப்பாக அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் 'தளபதி 64' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

டெல்லி ஷெட்யூல் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் கர்நாடகாவில் உள்ள ஷிவமோகாவில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு 'தளபதி 64' படக்குழு தயாராகி உள்ளது.

இந்நிலையில், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், அதற்காகத்தான் அர்ஜுன் தாஸ் 'தளபதி 64'ல் இணைந்துள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது.

அர்ஜுன் தாஸ்

அர்ஜுன் தாஸ்

கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், ஆர்.ஜே.வாக இருந்து நடிகராக மாறியவர். கும்கி 2 படத்திலும் இவர் தான் வில்லன். அர்ஜுன் தாஸ் வில்லன் மட்டும் இல்லைங்க, ஹீரோவும் தான், இவர் ஹீரோவாக நடித்துள்ள அந்தகாரம் படமும் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.

எத்தனை வில்லன்

தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அதேபோல மலையாள நடிகரான ஆண்டனி வர்கீஸும் நடித்து வருகிறார். இந்நிலையில், கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் தற்போது இணைந்துள்ளார்.

கூஸ்பம்ப்ஸ்

கூஸ்பம்ப்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான கைதி படம் மாபெரும் வெற்றியை பெற்றதற்கு, ஒவ்வொரு காட்சிகளும் எதிர்பாரதவிதமாக வந்து ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்ததே காரணம். ‘தளபதி 64' படத்திலும் அதுபோன்று கூஸ்பம்ப்ஸான காட்சிகள் இருக்கும் என தளபதி ரசிகர்கள் ஆவலோடு வெயிட்டிங்.

அவருக்கு பதில் இவரா

மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் கால்ஷீட் காரணமாக படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், அவருக்கு பதிலாகத்தான் தற்போது, அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார் என்றும் இந்த நெட்டிசன் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

லைஃப் டைம் செட்டில்மென்ட்

கைதி படத்தில் போலீஸ்காரர்களின் தலைகளை எடுத்துட்டு வரும் ரவுடி கும்பலுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் என அர்ஜுன் தாஸ் பேசும் வசனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ‘தளபதி 64' படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ள செய்தி அறிந்த விஜய் ரசிகர்கள், இவன் தலையை எடுத்துட்டு வரவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்யா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கொல வெயிட்டிங்

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்குக்காக தளபதி ரசிகர்கள் கொல வெயிட்டிங்கில் உள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் சீக்கிரமே விட வேண்டும் என்றும், டீஸரை நியூ இயருக்கு விட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X