»   »  என்னை ஒழித்த அஜீத்: காஜா மைதீன் கடும் புகார்! எனது பிரச்சினை களுக்கும், நான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததற்கும் நடிகர் அஜீத்தே காரணம் எனதயாரிப்பாளர் காஜா மைதீன் புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள காஜா மைதீன் சில தினங்களுக்கு முன் தனது காதல் மனைவியும்நடிகையுமான ஆம்னி என்ற ஆயிஷாவுடன் தற்கொலைக்கு முயற்சித்தார். இருவரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பியுள்ளனர்.இந் நிலையில் விஜய்காந்த் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாலும், வேட்டையாடு விளையாடுபடத்தைத் தொடங்குவதில், கமல்ஹாசனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவுமே காஜா மைதீன் தற்கொலைக்குமுயன்றதாகப் பேசப்பட்டது.இதையடுத்து காஜா மைதீனை நேரில் சந்தித்தார் கமல்ஹாசன். அதன் பின்னர் தனக்கும், கமலுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை. எனது குழப்பத்திற்கு, முடிவுக்கும் வேறு காரணம் இருப்பதாக காஜா மைதீன்தெரிவித்திருந்தார்.இந் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காஜா மைதீன் நடிகர் அஜீத் மீது சரமாரியாக புகார்களைக் கூறினார்.காஜா மைதீனின் பேட்டி விவரம்:ஆனந்த பூங்காற்றே படத்தை நான் தயாரித்தபோது அதில் நடிக்க அஜீத்தை ஒப்பந்தம் செய்தேன்.திட்டமிட்டபடி படப்பிடிப்பும் தொடங்கியது. இந்த நிலையில் கார்ப் பந்தயத்தில் கலந்து கொண்டு விபத்தில்சிக்கினார் அஜீத்.இதனால் படம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிரஷாந்த்தை வைத்து படத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துஅஜீத்தை அணுகினேன். அதற்கு இல்லை, இல்லை நானே நடிக்கிறேன். வேறு நடிகரை தயவு செய்து நாடவேண்டாம் என்று கூறினார். இதனால் அஜீத் குணமாகும் வரை காத்திருந்தேன்.இந் நிலையில் ஜனா படத்தை அஜீத்தை வைத்து ஆரம்பித்தேன். இதற்காக ரூ. ஒன்றரை கோடியை முன் பணமாகஅவருக்கு வழங்கினேன். 2002ம் ஆண்டிலேயே படத்தை ஆரம்பித்தோம்.இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகி விட்டது. ஒரு வருடத்தில் படத்தை முடித்துக் கொடுப்பதாக கூறியஅஜீத், கார் பந்தயத்தில் கலந்து கொண்டதன் மூலம் படம் முடிய 2 ஆண்டுகள் ஆகி விட்டது. மேலும் இப்படத்தைமுடிப்பதற்கு என்னைப் பல முறை அலைய வைத்து விட்டார். இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.ஜனா படத்தை ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு குழப்பங்களைச் செய்தார் அஜீத். இயக்குனர்களை தேர்வுசெய்வதற்குள் மிகவும் சிரமப்படுத்தி விட்டார். 10 பேர் வரை பார்த்து அனைவரையும் நிராகரித்தார். பின்னர்மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷை தேர்வு செய்தார்.ஆனால் ஷாஜி கைலாஷ் தெலுங்குப் படம் ஒன்றில் பிசியாக இருந்ததால், இடையில் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். இந் நிலையில் நடிகர் சங்க கலை நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக நான் துபாய் சென்றேன். திரும்பிவந்தபோது, அஜீத்தின் வில்லன் படம் ரிலீஸ் ஆகியிருந்தது.வில்லன் படக் கதை, ஜனா படத்தில் நடிப்பதற்காக நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த கதையே தான். இதைஅறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனால் ஜனா கதையை மாற்றி வேறு கதையை தேர்வு செய்து படத்தை எடுக்க ஆரம்பித்தோம். ஆனாலும்அஜீத்தின் தொந்தரவுகள் குறையவில்லை.இயக்குனர் தேர்வில் குழப்பிய அஜீத் இப்போது ஹீரோயின் தேர்விலும் சொதப்பினார். 2 முறை ஹீரோயின்களைமாற்றினார். இப்படி பல்வேறு இடையூறுகள், தொந்தரவுகளைத் தாண்டி கடந்த ஆண்டு இப்படம் வந்தது. இந்தப்படத்தால் எனக்கு ஏற்பட்ட மொத்த நஷ்டம் ரூ. 8 கோடி.பத்து வருடமாக திரைத் துறையில் இருக்கும் நான் சந்தித்த முதல் நஷ்டம், மிகப் பெரிய நஷ்டம் இதுதான்.ஆனந்த பூங்காற்றே படத்தின்போது அவர் விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்தபோது பிரஷாந்த்தை வைத்துஎடுக்கப் பாவதாக நான் கூறியதால் என்னைப் பழிவாங்கும் விதமாக இவ்வாறு அஜீத் நடந்து கொண்டார்என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்..அவரது செயல்கள் என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டன. அத்தோடு நஷ்டமும் கூட சேர்ந்துகொண்டதால் நான் உடைந்து போனேன்.திரைத்துறையில் கஷ்டப்பட்ட ஈட்டிய எனது சொத்துக்களை பைனான்சியர் ஒருவரிடம் அடமானம் வைத்துகடன் வாங்கியிருந்தேன்.வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் எனது சொத்துக்களை அந்த பைனான்சியர்அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார். அத்தோடு அவரிடம் நான் கொடுத்து வைத்திருந்த ரூ. 2கோடி பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்.அவர் மீது முதல்வர் அல்லது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க முடிவுசெய்துள்ளேன்.இடையில் நான் தயாரித்த தேவதையைக் கண்டேன் நன்றாக ஓடியும் எனக்கு அதில் லாபம் கிடைக்கவில்லை.இப்போது விஜயகாந்த்தை வைத்து தயாரித்துள்ள பேரரசு படம் முடிந்து விட்டது.கமல் சாரை வைத்து வேட்டையாடு விளையாடு படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் காஜா மைதீன்.காஜா மைதீன் புகார் குறித்து ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள அஜீத்தை தொடர்பு கொண்டபோது,இதுதொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.வழக்கமாக தற்கொலைக்கு முயற்சித்தால் உடனடியாக அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்படுவதுவழக்கம். ஆனால் காஜாமைதீன் விவகாரத்தில் இதுவரை போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எங்களுக்குப் புகார்வரவில்லை. புகார் வராமல் நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றனர்,காஜா மைதீன் விவகாரத்தில் கமல், விஜய்காந்த் மீது கோலிவுட் சந்தேகக் கண் வைத்த நிலையில் அஜீத் மீது அவர்சுமத்தியுள்ள கடும் குற்றச்சாட்டுக்களால் இந்த புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

என்னை ஒழித்த அஜீத்: காஜா மைதீன் கடும் புகார்! எனது பிரச்சினை களுக்கும், நான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததற்கும் நடிகர் அஜீத்தே காரணம் எனதயாரிப்பாளர் காஜா மைதீன் புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள காஜா மைதீன் சில தினங்களுக்கு முன் தனது காதல் மனைவியும்நடிகையுமான ஆம்னி என்ற ஆயிஷாவுடன் தற்கொலைக்கு முயற்சித்தார். இருவரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பியுள்ளனர்.இந் நிலையில் விஜய்காந்த் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாலும், வேட்டையாடு விளையாடுபடத்தைத் தொடங்குவதில், கமல்ஹாசனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவுமே காஜா மைதீன் தற்கொலைக்குமுயன்றதாகப் பேசப்பட்டது.இதையடுத்து காஜா மைதீனை நேரில் சந்தித்தார் கமல்ஹாசன். அதன் பின்னர் தனக்கும், கமலுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை. எனது குழப்பத்திற்கு, முடிவுக்கும் வேறு காரணம் இருப்பதாக காஜா மைதீன்தெரிவித்திருந்தார்.இந் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காஜா மைதீன் நடிகர் அஜீத் மீது சரமாரியாக புகார்களைக் கூறினார்.காஜா மைதீனின் பேட்டி விவரம்:ஆனந்த பூங்காற்றே படத்தை நான் தயாரித்தபோது அதில் நடிக்க அஜீத்தை ஒப்பந்தம் செய்தேன்.திட்டமிட்டபடி படப்பிடிப்பும் தொடங்கியது. இந்த நிலையில் கார்ப் பந்தயத்தில் கலந்து கொண்டு விபத்தில்சிக்கினார் அஜீத்.இதனால் படம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிரஷாந்த்தை வைத்து படத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துஅஜீத்தை அணுகினேன். அதற்கு இல்லை, இல்லை நானே நடிக்கிறேன். வேறு நடிகரை தயவு செய்து நாடவேண்டாம் என்று கூறினார். இதனால் அஜீத் குணமாகும் வரை காத்திருந்தேன்.இந் நிலையில் ஜனா படத்தை அஜீத்தை வைத்து ஆரம்பித்தேன். இதற்காக ரூ. ஒன்றரை கோடியை முன் பணமாகஅவருக்கு வழங்கினேன். 2002ம் ஆண்டிலேயே படத்தை ஆரம்பித்தோம்.இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகி விட்டது. ஒரு வருடத்தில் படத்தை முடித்துக் கொடுப்பதாக கூறியஅஜீத், கார் பந்தயத்தில் கலந்து கொண்டதன் மூலம் படம் முடிய 2 ஆண்டுகள் ஆகி விட்டது. மேலும் இப்படத்தைமுடிப்பதற்கு என்னைப் பல முறை அலைய வைத்து விட்டார். இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.ஜனா படத்தை ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு குழப்பங்களைச் செய்தார் அஜீத். இயக்குனர்களை தேர்வுசெய்வதற்குள் மிகவும் சிரமப்படுத்தி விட்டார். 10 பேர் வரை பார்த்து அனைவரையும் நிராகரித்தார். பின்னர்மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷை தேர்வு செய்தார்.ஆனால் ஷாஜி கைலாஷ் தெலுங்குப் படம் ஒன்றில் பிசியாக இருந்ததால், இடையில் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். இந் நிலையில் நடிகர் சங்க கலை நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக நான் துபாய் சென்றேன். திரும்பிவந்தபோது, அஜீத்தின் வில்லன் படம் ரிலீஸ் ஆகியிருந்தது.வில்லன் படக் கதை, ஜனா படத்தில் நடிப்பதற்காக நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த கதையே தான். இதைஅறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனால் ஜனா கதையை மாற்றி வேறு கதையை தேர்வு செய்து படத்தை எடுக்க ஆரம்பித்தோம். ஆனாலும்அஜீத்தின் தொந்தரவுகள் குறையவில்லை.இயக்குனர் தேர்வில் குழப்பிய அஜீத் இப்போது ஹீரோயின் தேர்விலும் சொதப்பினார். 2 முறை ஹீரோயின்களைமாற்றினார். இப்படி பல்வேறு இடையூறுகள், தொந்தரவுகளைத் தாண்டி கடந்த ஆண்டு இப்படம் வந்தது. இந்தப்படத்தால் எனக்கு ஏற்பட்ட மொத்த நஷ்டம் ரூ. 8 கோடி.பத்து வருடமாக திரைத் துறையில் இருக்கும் நான் சந்தித்த முதல் நஷ்டம், மிகப் பெரிய நஷ்டம் இதுதான்.ஆனந்த பூங்காற்றே படத்தின்போது அவர் விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்தபோது பிரஷாந்த்தை வைத்துஎடுக்கப் பாவதாக நான் கூறியதால் என்னைப் பழிவாங்கும் விதமாக இவ்வாறு அஜீத் நடந்து கொண்டார்என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்..அவரது செயல்கள் என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டன. அத்தோடு நஷ்டமும் கூட சேர்ந்துகொண்டதால் நான் உடைந்து போனேன்.திரைத்துறையில் கஷ்டப்பட்ட ஈட்டிய எனது சொத்துக்களை பைனான்சியர் ஒருவரிடம் அடமானம் வைத்துகடன் வாங்கியிருந்தேன்.வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் எனது சொத்துக்களை அந்த பைனான்சியர்அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார். அத்தோடு அவரிடம் நான் கொடுத்து வைத்திருந்த ரூ. 2கோடி பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்.அவர் மீது முதல்வர் அல்லது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க முடிவுசெய்துள்ளேன்.இடையில் நான் தயாரித்த தேவதையைக் கண்டேன் நன்றாக ஓடியும் எனக்கு அதில் லாபம் கிடைக்கவில்லை.இப்போது விஜயகாந்த்தை வைத்து தயாரித்துள்ள பேரரசு படம் முடிந்து விட்டது.கமல் சாரை வைத்து வேட்டையாடு விளையாடு படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் காஜா மைதீன்.காஜா மைதீன் புகார் குறித்து ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள அஜீத்தை தொடர்பு கொண்டபோது,இதுதொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.வழக்கமாக தற்கொலைக்கு முயற்சித்தால் உடனடியாக அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்படுவதுவழக்கம். ஆனால் காஜாமைதீன் விவகாரத்தில் இதுவரை போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எங்களுக்குப் புகார்வரவில்லை. புகார் வராமல் நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றனர்,காஜா மைதீன் விவகாரத்தில் கமல், விஜய்காந்த் மீது கோலிவுட் சந்தேகக் கண் வைத்த நிலையில் அஜீத் மீது அவர்சுமத்தியுள்ள கடும் குற்றச்சாட்டுக்களால் இந்த புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

எனது பிரச்சினை களுக்கும், நான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததற்கும் நடிகர் அஜீத்தே காரணம் எனதயாரிப்பாளர் காஜா மைதீன் புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள காஜா மைதீன் சில தினங்களுக்கு முன் தனது காதல் மனைவியும்நடிகையுமான ஆம்னி என்ற ஆயிஷாவுடன் தற்கொலைக்கு முயற்சித்தார். இருவரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பியுள்ளனர்.

இந் நிலையில் விஜய்காந்த் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாலும், வேட்டையாடு விளையாடுபடத்தைத் தொடங்குவதில், கமல்ஹாசனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவுமே காஜா மைதீன் தற்கொலைக்குமுயன்றதாகப் பேசப்பட்டது.

இதையடுத்து காஜா மைதீனை நேரில் சந்தித்தார் கமல்ஹாசன். அதன் பின்னர் தனக்கும், கமலுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை. எனது குழப்பத்திற்கு, முடிவுக்கும் வேறு காரணம் இருப்பதாக காஜா மைதீன்தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காஜா மைதீன் நடிகர் அஜீத் மீது சரமாரியாக புகார்களைக் கூறினார்.காஜா மைதீனின் பேட்டி விவரம்:

ஆனந்த பூங்காற்றே படத்தை நான் தயாரித்தபோது அதில் நடிக்க அஜீத்தை ஒப்பந்தம் செய்தேன்.திட்டமிட்டபடி படப்பிடிப்பும் தொடங்கியது. இந்த நிலையில் கார்ப் பந்தயத்தில் கலந்து கொண்டு விபத்தில்சிக்கினார் அஜீத்.

இதனால் படம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிரஷாந்த்தை வைத்து படத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துஅஜீத்தை அணுகினேன். அதற்கு இல்லை, இல்லை நானே நடிக்கிறேன். வேறு நடிகரை தயவு செய்து நாடவேண்டாம் என்று கூறினார். இதனால் அஜீத் குணமாகும் வரை காத்திருந்தேன்.

இந் நிலையில் ஜனா படத்தை அஜீத்தை வைத்து ஆரம்பித்தேன். இதற்காக ரூ. ஒன்றரை கோடியை முன் பணமாகஅவருக்கு வழங்கினேன். 2002ம் ஆண்டிலேயே படத்தை ஆரம்பித்தோம்.

இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகி விட்டது. ஒரு வருடத்தில் படத்தை முடித்துக் கொடுப்பதாக கூறியஅஜீத், கார் பந்தயத்தில் கலந்து கொண்டதன் மூலம் படம் முடிய 2 ஆண்டுகள் ஆகி விட்டது. மேலும் இப்படத்தைமுடிப்பதற்கு என்னைப் பல முறை அலைய வைத்து விட்டார். இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

ஜனா படத்தை ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு குழப்பங்களைச் செய்தார் அஜீத். இயக்குனர்களை தேர்வுசெய்வதற்குள் மிகவும் சிரமப்படுத்தி விட்டார். 10 பேர் வரை பார்த்து அனைவரையும் நிராகரித்தார். பின்னர்மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷை தேர்வு செய்தார்.

ஆனால் ஷாஜி கைலாஷ் தெலுங்குப் படம் ஒன்றில் பிசியாக இருந்ததால், இடையில் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். இந் நிலையில் நடிகர் சங்க கலை நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக நான் துபாய் சென்றேன். திரும்பிவந்தபோது, அஜீத்தின் வில்லன் படம் ரிலீஸ் ஆகியிருந்தது.

வில்லன் படக் கதை, ஜனா படத்தில் நடிப்பதற்காக நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த கதையே தான். இதைஅறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதனால் ஜனா கதையை மாற்றி வேறு கதையை தேர்வு செய்து படத்தை எடுக்க ஆரம்பித்தோம். ஆனாலும்அஜீத்தின் தொந்தரவுகள் குறையவில்லை.

இயக்குனர் தேர்வில் குழப்பிய அஜீத் இப்போது ஹீரோயின் தேர்விலும் சொதப்பினார். 2 முறை ஹீரோயின்களைமாற்றினார். இப்படி பல்வேறு இடையூறுகள், தொந்தரவுகளைத் தாண்டி கடந்த ஆண்டு இப்படம் வந்தது. இந்தப்படத்தால் எனக்கு ஏற்பட்ட மொத்த நஷ்டம் ரூ. 8 கோடி.

பத்து வருடமாக திரைத் துறையில் இருக்கும் நான் சந்தித்த முதல் நஷ்டம், மிகப் பெரிய நஷ்டம் இதுதான்.ஆனந்த பூங்காற்றே படத்தின்போது அவர் விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்தபோது பிரஷாந்த்தை வைத்துஎடுக்கப் பாவதாக நான் கூறியதால் என்னைப் பழிவாங்கும் விதமாக இவ்வாறு அஜீத் நடந்து கொண்டார்என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.

.அவரது செயல்கள் என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டன. அத்தோடு நஷ்டமும் கூட சேர்ந்துகொண்டதால் நான் உடைந்து போனேன்.

திரைத்துறையில் கஷ்டப்பட்ட ஈட்டிய எனது சொத்துக்களை பைனான்சியர் ஒருவரிடம் அடமானம் வைத்துகடன் வாங்கியிருந்தேன்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் எனது சொத்துக்களை அந்த பைனான்சியர்அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார். அத்தோடு அவரிடம் நான் கொடுத்து வைத்திருந்த ரூ. 2கோடி பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்.


அவர் மீது முதல்வர் அல்லது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க முடிவுசெய்துள்ளேன்.

இடையில் நான் தயாரித்த தேவதையைக் கண்டேன் நன்றாக ஓடியும் எனக்கு அதில் லாபம் கிடைக்கவில்லை.இப்போது விஜயகாந்த்தை வைத்து தயாரித்துள்ள பேரரசு படம் முடிந்து விட்டது.

கமல் சாரை வைத்து வேட்டையாடு விளையாடு படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் காஜா மைதீன்.

காஜா மைதீன் புகார் குறித்து ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள அஜீத்தை தொடர்பு கொண்டபோது,இதுதொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

வழக்கமாக தற்கொலைக்கு முயற்சித்தால் உடனடியாக அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்படுவதுவழக்கம். ஆனால் காஜாமைதீன் விவகாரத்தில் இதுவரை போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எங்களுக்குப் புகார்வரவில்லை. புகார் வராமல் நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றனர்,

காஜா மைதீன் விவகாரத்தில் கமல், விஜய்காந்த் மீது கோலிவுட் சந்தேகக் கண் வைத்த நிலையில் அஜீத் மீது அவர்சுமத்தியுள்ள கடும் குற்றச்சாட்டுக்களால் இந்த புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil