twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தற்கொலை முயற்சி: கமிஷனரிடம் காஜா விளக்கம் பைனான்சியர் ஏமாற்றி விட்ட காரணத்தால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என தயாரிப்பாளர் காஜா மைதீன் சென்னைமாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் காஜா மைதீனும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றனர். தீவிரசிகிச்சைக்குப் பின்னர் காஜா மைதீன் பிழைத்துக் கொண்டார். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு காஜா மைதீன் கூறுகையில், நடிகர் அஜீத் கொடுத்த தொந்தரவுகள், ஏற்படுத்திய சிக்கல்கள்மற்றும் பைனான்சியர் ஒருவர் தனது சொத்துக்களை அபகரித்தது ஆகிய காரணங்களால் தான் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில், காஜா மைதீன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தனது வக்கீலுடன்வந்தார். ஆணையர் நடராஜை சந்தித்துப் பேசினார். பின்னர் அவரிடம் ஒரு மனுவையும் அளித்தார்.அதன் பிறகு வெளியில் வந்த காஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்கொலைக்கு முயன்றது சட்டப்படி குற்றமாகும்.எனவே எனது செயலுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். அதனால்தான் ஆணையரை சந்தித்து விளக்கம்அளித்தேன்.நான் நாகா என்ற பைனான்சியரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதற்கு அடமானமாக எனது போரூர் வீட்டுப்பத்திரத்தை அவரிடம் கொடுத்திருந்தேன். அத்தோடு ரூ. 2 கோடி பணத்தையும் கொடுத்து வைத்திருந்தேன்.ஆனால் அந்த பைனான்சியர் எனது வீட்டுப் பத்திரத்தை திருத்தி அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார்.அத்தோடு நான் கொடுத்து வைத்திருந்த பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்குஆளானேன். இதன் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றேன்.இவை அனைத்தையும் ஆணையரிடம் விளக்கி பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். கண்டிப்பாகநடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறினார். நான் வேறு யார் மீதும், எந்த நடிகர் மீதும் புகார் கூறவில்லை. வேறு யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை என்றார் காஜாமைதீன்.காஜா மைதீன் கொடுத்துள்ள மனுவைக் கொண்டு சம்பந்தப்பட்ட பைனான்சியர் மீது கந்து வட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ்போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    By Staff
    |

    பைனான்சியர் ஏமாற்றி விட்ட காரணத்தால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என தயாரிப்பாளர் காஜா மைதீன் சென்னைமாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

    சமீபத்தில் காஜா மைதீனும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றனர். தீவிரசிகிச்சைக்குப் பின்னர் காஜா மைதீன் பிழைத்துக் கொண்டார்.

    இது குறித்து சில நாட்களுக்கு முன்பு காஜா மைதீன் கூறுகையில், நடிகர் அஜீத் கொடுத்த தொந்தரவுகள், ஏற்படுத்திய சிக்கல்கள்மற்றும் பைனான்சியர் ஒருவர் தனது சொத்துக்களை அபகரித்தது ஆகிய காரணங்களால் தான் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந் நிலையில், காஜா மைதீன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தனது வக்கீலுடன்வந்தார். ஆணையர் நடராஜை சந்தித்துப் பேசினார். பின்னர் அவரிடம் ஒரு மனுவையும் அளித்தார்.

    அதன் பிறகு வெளியில் வந்த காஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்கொலைக்கு முயன்றது சட்டப்படி குற்றமாகும்.எனவே எனது செயலுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். அதனால்தான் ஆணையரை சந்தித்து விளக்கம்அளித்தேன்.


    நான் நாகா என்ற பைனான்சியரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதற்கு அடமானமாக எனது போரூர் வீட்டுப்பத்திரத்தை அவரிடம் கொடுத்திருந்தேன். அத்தோடு ரூ. 2 கோடி பணத்தையும் கொடுத்து வைத்திருந்தேன்.

    ஆனால் அந்த பைனான்சியர் எனது வீட்டுப் பத்திரத்தை திருத்தி அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார்.அத்தோடு நான் கொடுத்து வைத்திருந்த பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்குஆளானேன். இதன் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றேன்.

    இவை அனைத்தையும் ஆணையரிடம் விளக்கி பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். கண்டிப்பாகநடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறினார்.

    நான் வேறு யார் மீதும், எந்த நடிகர் மீதும் புகார் கூறவில்லை. வேறு யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை என்றார் காஜாமைதீன்.

    காஜா மைதீன் கொடுத்துள்ள மனுவைக் கொண்டு சம்பந்தப்பட்ட பைனான்சியர் மீது கந்து வட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ்போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X