»   »  காஜா மைதீன் புகாருக்கு பைனான்சியர் மறுப்பு! தயாரிப்பாளர் காஜா மைதீனின் வீட்டை நான் ஏமாற்றி அபகரிக்கவில்லை. அவரது பணத்தையும் நான் மோசடிசெய்யவில்லை. என் மீது காஜா மைதீன் அபாண்டமாக புகார் கூறுகிறார் என்று பைனான்சியர் சுபாஷ் நஹர் கூறியுள்ளார். சமீபத்தில் தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர் காஜா மைதீன் தனது நிலைக்கு பைனான்சியர் சுபாஷ் நிஹர் தான் காரணம்எனக் கூறியிருந்தார். தான் வாங்கிய ரூ. 20 லட்சம் கடனுக்காக தனது வீட்டை ஏமாற்றி தனது மனைவி பெயரில் நஹர் எழுதிக்கொண்டார்.அவரிடம் கொடுத்திருந்த ரூ. 2 கோடி பணத்தையும் மோசடி செய்து விட்டதாக காஜா மைதீன் கூறியிருந்தார். இதுதொடர்பாகசென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை நேரில் சந்தித்து புகார் மனுவும் கொடுத்தார். இந் நிலையில் காஜாவின் புகாரை நஹர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆழ்வார்ப்பேட்டையில்வசித்துவருகிறேன். நீண்ட காலமாகவே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை என் மீது எந்தபுகாரும் வந்ததில்லை. காஜா மைதீன் பொய்யான தகவலை சொல்லி வருகிறார். அவர் என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கவும் இல்லை. நான் அவரதுவீட்டை அபகரிக்கவும் இல்லை. அன்னக்கிளி என்பவர் தான் என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்தப் பணத்தைதிருப்பிச் செலுத்த முடியாததால் அவரது வீட்டை என்னிடம் விற்றார். கடன் தொகை போக மீதப் பணத்தை நான் அவரிடம் கொடுத்து விட்டேன். அந்த இடத்திற்கும், காஜாவுக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. வேட்டையாடு விளையாடு படத்திற்காக காஜா மைதீன் என்னிடம் ரூ. 3 கோடி கடன் வாங்கியுள்ளார். அதற்கு முறையாக வட்டி கூட அவர் செலுத்தாமல் உள்ளார். இந் நிலையில் என் மீது அவர் அபாண்டமாக பழி சுமத்திவருகிறார். அவர் மீது நானும் கமிஷனரிடம் புகார் கொடுக்கவுள்ளேன். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளேன் என்றார்நஹர்.

காஜா மைதீன் புகாருக்கு பைனான்சியர் மறுப்பு! தயாரிப்பாளர் காஜா மைதீனின் வீட்டை நான் ஏமாற்றி அபகரிக்கவில்லை. அவரது பணத்தையும் நான் மோசடிசெய்யவில்லை. என் மீது காஜா மைதீன் அபாண்டமாக புகார் கூறுகிறார் என்று பைனான்சியர் சுபாஷ் நஹர் கூறியுள்ளார். சமீபத்தில் தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர் காஜா மைதீன் தனது நிலைக்கு பைனான்சியர் சுபாஷ் நிஹர் தான் காரணம்எனக் கூறியிருந்தார். தான் வாங்கிய ரூ. 20 லட்சம் கடனுக்காக தனது வீட்டை ஏமாற்றி தனது மனைவி பெயரில் நஹர் எழுதிக்கொண்டார்.அவரிடம் கொடுத்திருந்த ரூ. 2 கோடி பணத்தையும் மோசடி செய்து விட்டதாக காஜா மைதீன் கூறியிருந்தார். இதுதொடர்பாகசென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை நேரில் சந்தித்து புகார் மனுவும் கொடுத்தார். இந் நிலையில் காஜாவின் புகாரை நஹர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆழ்வார்ப்பேட்டையில்வசித்துவருகிறேன். நீண்ட காலமாகவே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை என் மீது எந்தபுகாரும் வந்ததில்லை. காஜா மைதீன் பொய்யான தகவலை சொல்லி வருகிறார். அவர் என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கவும் இல்லை. நான் அவரதுவீட்டை அபகரிக்கவும் இல்லை. அன்னக்கிளி என்பவர் தான் என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்தப் பணத்தைதிருப்பிச் செலுத்த முடியாததால் அவரது வீட்டை என்னிடம் விற்றார். கடன் தொகை போக மீதப் பணத்தை நான் அவரிடம் கொடுத்து விட்டேன். அந்த இடத்திற்கும், காஜாவுக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. வேட்டையாடு விளையாடு படத்திற்காக காஜா மைதீன் என்னிடம் ரூ. 3 கோடி கடன் வாங்கியுள்ளார். அதற்கு முறையாக வட்டி கூட அவர் செலுத்தாமல் உள்ளார். இந் நிலையில் என் மீது அவர் அபாண்டமாக பழி சுமத்திவருகிறார். அவர் மீது நானும் கமிஷனரிடம் புகார் கொடுக்கவுள்ளேன். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளேன் என்றார்நஹர்.

Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் காஜா மைதீனின் வீட்டை நான் ஏமாற்றி அபகரிக்கவில்லை. அவரது பணத்தையும் நான் மோசடிசெய்யவில்லை. என் மீது காஜா மைதீன் அபாண்டமாக புகார் கூறுகிறார் என்று பைனான்சியர் சுபாஷ் நஹர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர் காஜா மைதீன் தனது நிலைக்கு பைனான்சியர் சுபாஷ் நிஹர் தான் காரணம்எனக் கூறியிருந்தார். தான் வாங்கிய ரூ. 20 லட்சம் கடனுக்காக தனது வீட்டை ஏமாற்றி தனது மனைவி பெயரில் நஹர் எழுதிக்கொண்டார்.

அவரிடம் கொடுத்திருந்த ரூ. 2 கோடி பணத்தையும் மோசடி செய்து விட்டதாக காஜா மைதீன் கூறியிருந்தார். இதுதொடர்பாகசென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை நேரில் சந்தித்து புகார் மனுவும் கொடுத்தார்.

இந் நிலையில் காஜாவின் புகாரை நஹர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆழ்வார்ப்பேட்டையில்வசித்துவருகிறேன். நீண்ட காலமாகவே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை என் மீது எந்தபுகாரும் வந்ததில்லை.

காஜா மைதீன் பொய்யான தகவலை சொல்லி வருகிறார். அவர் என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கவும் இல்லை. நான் அவரதுவீட்டை அபகரிக்கவும் இல்லை. அன்னக்கிளி என்பவர் தான் என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்தப் பணத்தைதிருப்பிச் செலுத்த முடியாததால் அவரது வீட்டை என்னிடம் விற்றார்.

கடன் தொகை போக மீதப் பணத்தை நான் அவரிடம் கொடுத்து விட்டேன். அந்த இடத்திற்கும், காஜாவுக்கும் எந்த சம்பந்தமும்இல்லை. வேட்டையாடு விளையாடு படத்திற்காக காஜா மைதீன் என்னிடம் ரூ. 3 கோடி கடன் வாங்கியுள்ளார்.

அதற்கு முறையாக வட்டி கூட அவர் செலுத்தாமல் உள்ளார். இந் நிலையில் என் மீது அவர் அபாண்டமாக பழி சுமத்திவருகிறார். அவர் மீது நானும் கமிஷனரிடம் புகார் கொடுக்கவுள்ளேன். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளேன் என்றார்நஹர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil