காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா?: வாழ்வு தான்
சென்னை: இந்தியன் 2 படத்தில் கமல் ஹாஸன் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஷங்கர் உலக நாயகன் கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்குகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். முதல் பாகத்தை போன்றே இந்த பாகத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் அவர்.

காஜல் அகர்வால்
இந்தியன் 2 படத்தில் கமல் ஹாஸன் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்பட்டது. நயன்தாரா சில நிபந்தனைகள் விதித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஹீரோயினாக காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்ய ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.

லைகா
கமல் ஹாஸன் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இது குறித்து காஜல் அகர்வாலிடம் கேட்டால் அவர் எதுவும் கூறவில்லை. ரஜினியின் 2.0 படத்தை போன்றே கமலின் இந்தியன் 2 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் நயன்தாரா. கமல் போன்ற மெகா ஹீரோவின் படத்தில் தனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது என்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹீரோ
ஹீரோவுடன் டூயட் பாடுவதுடன் தனது வேலை முடிந்துவிடும் கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்வார் காஜல் அகர்வால். கமலுடன் ஜோடி சேர பல நடிகைகள் ஆவலுடன் இருக்கும்போது காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் நிலையில் உள்ளது. அஜித், விஜய்யுடன் ஜோடி சேர்ந்த காஜல் அவர்களின் சீனியருடன் டூயட் பாட உள்ளார்.


Click it and Unblock the Notifications











