வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு
சென்னை: வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வாலும் யோகி பாபுவும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் பிரேம்ஜியுடன் யோகி பாபு இருக்கும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடித்தவர்கள் சின்னத்திரையில் நடித்த காலம் போய் இப்போது வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
வெங்கட் பிரபு ஒரு வெப் சீரிஸை எடுத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பணிகள் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இணைய தொடரில், கயல் ஆனந்தி, வைபவ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு கடைசியாக சென்னை-28 பார்ட் 2 படம் இயக்கியிருந்தார். ,அதற்கு பிறகு மிர்ச்சி.சிவா, கேத்தரின் தெரசா, சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோரை வைத்து பார்ட்டி படத்தை இயக்கி வந்தார்.
அந்த படம் கூடிய விரைவில் ரிலீஸாகும் என்று தெரிகிறது. அதற்கு பிறகு சிம்புவை வைத்து இயக்கவிருந்த மாநாடு பட ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்கினார். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த படமும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தற்போது வெங்கட் பிரபு ஒரு வெப் சீரிஸை எடுத்து வருகிறார். இதன் ஷூட்டிங் பணிகள் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதை பிரபல இணையமான ஹாட்ஸ்டார் தயாரிப்பில் எடுக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் பத்து எபிசோடுகள் வரை அந்த இணைய தொடரில் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த இணைய தொடரில், காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது யோகி பாபுவும் இப்படத்தில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் கடைசியாக தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது காஜல் அகர்வால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். அதற்கு பிறகு இந்த வெப் சீரிஸில் இணைவார் என்று கூறப்படுகிறது.
தமிழில் மிக பிஸியாக நடித்து வரும் யோகி பாபு தற்போது பிகில் மற்றும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகுகிறது. காஜல் அகர்வால் நடிக்கவிருக்கும் வெப் சீரிஸின் ஷூட்டிங்க பணிகள் தற்போது ஏற்காட்டில் நடைபெற்று வருகிறது. இதன் ஷூட்டிங்கில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார். நடிகர் பிரேம்ஜியுடன் யோகி பாபு இருக்கும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











