மச்சக்கார பாலய்யா.. NBK108 படத்தில் இணைந்த 2 ஹாட் ஹீரோயின்.. யார் யாருன்னு தெரியுமா?
ஹைதராபாத்: பாலய்யா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா 62 வயதிலும் ஆக்ஷன் ஹீரோவாக அனல் பறக்க விடுகிறார்.
இந்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியான வீர சிம்ஹா ரெட்டி படம் தெலுங்கு ரசிகர்களை வேறலெவலில் மிரட்டியது.
அந்த படத்தில் பாலய்யாவுடன் இணைந்து 3 ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்நிலையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் NBK108 வது படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளனர்.

பறக்கவிடும் பாலய்யா
ஹெலிகாப்டரை கயிறு கட்டி கீழே இழுப்பது, ஓடும் ட்ரெய்னை ஒரு கையால் நிறுத்துவது, ஓங்கி ஒரு மிதி மிதித்தால் பிரம்மாண்ட காரே ஒரு கிலோ மீட்டருக்கு ரிவர்ஸிலேயே செல்வது என இன்னமும் ஆக்ஷன் காட்சிகளில் சும்மா எல்லாரையும் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் பாலய்யா. வீர சிம்ஹா ரெட்டி படத்திலும் அவரது வீர சாகசங்களுக்கு அளவே இல்லை. அதற்கு முன் வெளியான அகண்டா திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவே அமைந்தது.

மச்சக்காரர்
நயன்தாரா முதல் ஸ்ருதிஹாசன் வரை ஏகப்பட்ட முன்னணி நடிகைகள் பாலகிருஷ்ணா உடன் ஜோடி போட்டு நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் அவரது அம்மாவாகவும் ஹனி ரோஸ் நடித்திருந்தார். மகன் பாலய்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். மற்றும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தங்கையாகவும் வில்லியாகவும் மிரட்டி இருந்தார்.

21 வயது நடிகை ஜோடி
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் 108வது படத்தில் அவருக்கு ஜோடியாக டோலிவுட்டின் இளம் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார் என்கிற தகவல் சமீபத்தில் வெளியாகி பலரையும் இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெறும் 21 வயதே ஆன ஸ்ரீலீலா எப்படி பாலகிருஷ்ணா படத்தில் என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், இன்னொரு முன்னணி நடிகையும் தற்போது அந்த படத்தில் இணைந்துள்ளார்.

காஜல் அகர்வால்
திருமணத்துக்கு முன்னதாக கமிட்டான இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக NBK 108வது படத்தில் இணைந்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா மூவரும் செட்டில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











