“ரவுடி பேபி “புது படத்தில் கமிட்டாகி உள்ள காஜல் அகர்வால்… குவியும் பட வாய்ப்புகள் !
சென்னை : நடிகை காஜல் அகர்வால் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ரவுடி பேபி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜா சரவணன் என்ற புது இயக்குனர் இயக்க உள்ளார். இவர் பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

ஏராளமான ரசிகர்கள்
விஜய், அஜித், தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

கமல்ஹாசனுடன்
காஜல் அகர்வால் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும், நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா, சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா மற்றும் கோஸ்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், கங்கனா ரணாவத்திற்கு தேசிய விருதை பெற்றுத்தந்த குயின் திரைப்படத்தின் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளது.

கொல்கத்தாவில் ஷூட்டிங்
மேலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உமா என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Recommended Video

புது படத்தில் கமிட்
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், ரவுடி பேபி என்ற புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தை புது இயக்குனர் ராஜா சரவணன் இயக்க உள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பிள்ளை தயாரிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











