வெப் சீரிஸ்.. ஒரு கை பார்க்க களம் குதித்த காஜல் அகர்வால்.. 10 எபிசோடுகளுக்குத் தயார்!
சென்னை: காஜல் அகர்வால் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு புதிய கூட்டணி - வெப் சீரிஸ் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
விஜய், அஜித் என பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடித்து கொண்டு இருக்கும் நடிகை காஜல் அகர்வால்!! ஏன் இன்னும் என்று ஆச்சிரியம் என்று எண்ண வேண்டாம் காரணம் உள்ளது. வயது முப்பத்தி ஐந்து ஆனால் இருபதுகளின் கனவு கன்னி..

பொதுவாக பெண்களின் கண்களை மீனுடன் வர்ணிப்பார்கள். ஆனால் இவரின் கண்களோ சற்றே பெரிய மீன் என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய மீனின் கண்களை கொண்ட காஜல் அகர்வாலின் கண்கள் இப்பொது "வெப் சீரிஸ்" மீது விழுந்து உள்ளது.. ஏற்கனவே "ராதிகா ஆப்தே" போன்ற கதாநாயகிகளின் கண்கள் டிஜிட்டல் உலகின் மீது படிந்து உள்ள நிலையில் இப்பொது காஜல் அகர்வாலும் இதில் கவனம் செலுத்த உள்ளார்.
இவர் நடிக்க இருக்கும் வெப் சீரிஸ் மிக பெரிய செலவில் அதுவும் கோடிகளில் இருக்க போகிறதாம். அதிலும் வெப் சீரிஸ்க்கு பெயர் போன "ஹாட் ஸ்டார்" இதை தயாரிக்கும் என செய்தி.

இதை இயக்க இருக்கும் இயக்குனரோ இன்னும் சுவாரஸ்யமானவர் - நட்பிற்கு முக்கியத்துவம் குடுத்து படங்கள் எடுப்பார் என்பதை விட, அவர் தம்பிக்கு முக்கியத்துவம் குடுத்து படங்கள் எடுப்பார். அவர் எடுக்கும் படங்களின் கதை இருக்கிறதோ இலையோ இயக்குனரின் தம்பி கண்டிப்பாக இருப்பார்..
ஆம் நீங்கள் யூகிப்பது மிக சரியே இயக்குனர் வெங்கட் பிரபு தான். இந்த வெப் சீரிஸ் தமிழில் இயக்கப்பட்டு தெலுங்கு ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் மொழி மாற்றமும் செய்ய பட உள்ளது. இதுவரை காஜல் அகர்வால் திரைப்படங்களில் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்றதில்லை.

இதிலாவது இருக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வெப் சீரிஸ் காஜல் அகர்வாலுக்கு புது கதாபாத்திரம் இருக்கிறதோ இல்லையோ, இயக்குனர் தம்பி பிரேம்ஜிக்கு கட்டாயம் கதாபாத்திரம் தந்தே தீருவார்.


Click it and Unblock the Notifications











