புடிச்சது புளியங்கொம்பாச்சே, அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடுவாரா காஜல் அகர்வால்!
Recommended Video
சென்னை: புடிச்சது புளியங்கொம்பு என்பதால் காஜல் அகர்வால் அதை விடுவதாக இல்லையாம்.
தலைப்பை பார்த்து குழம்ப வேண்டாம். இது ஷங்கரின் இந்தியன் 2 பற்றியது ஆகும். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வேலைகளால் கமல் ஹாஸன் விடுத்த கோரிக்கையின்படி படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார் ஷங்கர். தேர்தல் முடிந்து அறிவிப்பு வெளியான கையோடு இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் காஜல் அகர்வால் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக பேச்சு கிளம்பியது.

காஜல் அகர்வால்
இந்தியன் 2 படத்திற்காக புது வித்தை எல்லாம் கற்ற காஜல் ப்ராஸ்தெடிக் மேக்கப்பிற்கு அளவு கொடுக்க அமெரிக்காவுக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாவதால் படத்தில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. விசாரித்துப் பார்த்ததில் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

சமத்து
விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளதாம். அதில் காஜல் அகர்வால் கலந்து கொள்வாராம். ஹீரோக்கள் எவ்வளவு லேட்டாக செட்டுக்கு வந்தாலும் கொஞ்சமும் கோபப்படாமல் பொறுமையாக காத்திருந்து நடிப்பவர் காஜல். அப்படிப்பட்டவர் படப்பிடிப்பு துவங்க தாமதமாவதால் கமல் ஹாஸனின் படத்தில் இருந்து விலக மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகைகள்
ஷங்கர் இயக்கத்தில் நடிக்க பல நடிகைகள் காத்துக் கிடக்கின்றார்கள். அப்படி இருக்கும்போது தன்னைத் தேடி வந்த வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லையாம் காஜல் அகர்வால். மேலும் கமல் ஹாஸன் நடிக்கும் கடைசி படம் இது என்பதால் அந்த அரிய வாய்ப்பை காஜல் கை நழுவிப் போக விடுவதாக இல்லையாம்.

லைகா
2.0 படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பதால் இந்தியன் 2 படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் எடுத்து முடிக்க லைகா ஷங்கரை வலியுறுத்தியதால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிட்டது. கமல் ஹாஸன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டே இந்தியன் 2 படத்தில் நடிப்பாரோ?


Click it and Unblock the Notifications











