ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ் செய்யும் காஜல்
காஜல் அகர்வால் ஜெயம் ரவியுடன் நடிக்க உள்ளார்
சென்னை: நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் இணைகிறார்.
தென்னிந்திய நடிகைகளில் முக்கியமான கதாநாயகியாக திகழ்பவர் காஜல் அகர்வால். இந்தியில் அறிமுகமாகி தெலுங்கு மற்றும் தமிழிலும் ஹிட் அடித்து வருகிறார்.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், மகேஷ்பாபு, ராம்சரண் ,அல்லு அர்ஜுன் என பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டார். டிக் டிக் டிக் திரைப்படத்திற்கு பிறகு அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயம் ரவி அடுத்ததாகவும் ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஜல் அகர்வாலுக்கு அடுத்ததாக ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பாரிஸ் பாரிஸ் என்ற நகைச்சுவைப் படமும், கன்னடத்தில் ஏகே 97, தத்தாஸ்து ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன.


Click it and Unblock the Notifications











