ரைட்டில் இறக்கி..லெப்ட்டில் தூக்கி.. ஒரு தினுசாக போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!
சென்னை : முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்போது படு பிஸியாக நடித்து வருகிறார்.
பல படங்களை கைவசம் வைத்துள்ள இவர் என்னத்தான் பிஸியாக இருந்தாலும் தனது ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போத புது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் ஜிகுஜிகு உடையில் பதிவிட்டுள்ள புகைப்படம் அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

அம்சமான நடிகை
பாரதி ராஜாவின் இயக்கத்தில் உருவாக பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான காஜல் அகர்வால், அம்சமான நடிகை என பெயர் எடுத்து தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்பு குவிந்தது
தமிழ் , தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் வெளியான மஹதீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்த அப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியானது தமிழிலும் இப்படம் வெற்றி பெற்று தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி ஹீரோக்கள்
அதைத்தொடர்ந்து, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா, மெர்சல், விவேகம் உட்பட பல படங்களில் நடித்த காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இதனால், முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகை என்ற பெயரும் இவருக்கு உண்டு.

படு பிஸி
கௌதம் என்பரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், துல்கர் சல்மானின் ஹே சினாமிக்காவிலும் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் ஹாட் ஸ்டாரில் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடர்
வெளியான. ஹாரர் கதைகளத்தை கொண்டு வெளிவந்துள்ள இந்த வெப் தொடர் 7 எபிஸோடுள்ளது.

தினுசு தினுசா போஸ்
காதல் கணவருடன் கொஞ்சல் , கைநிறைய படம் என என்னத்தான் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களுக்கு சிறிதும் குறை வைக்காமல் அவ்வப்போது புகைப்படத்தை பதிவிட்டு குஷிப்படுத்தி விருகிறார் காஜல். தற்போது இவர், ஜிகு ஜிகு உடையில் தினுசு தினுசா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











