அம்மாடி, எத்தா தண்டி ஸ்பூனு: போதுமாம்மா காஜல்?
சென்னை: பாரீஸில் காஜல் அகர்வால் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான க்வீன் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் காஜல் நடிக்கிறார்.
படப்பிடிப்புக்காக அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ளார்.

போதுமா?
பாரீஸில் பெரிய ஸ்பூனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் காஜல். ஸ்பூன் ஃபுல்லா சீனி என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

வேண்டாம்
காஜல் அகர்வாலின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, வேண்டாம் இவ்வளவு சீனி சாப்பிட்டால் குண்டாகிவிடுவீர்கள். ஒல்லியாக இருந்தால் தான் நல்லா இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

புகைப்படம்
பாரீஸுக்கு விமானத்தில் சென்றபோது செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் காஜல். க்வீன் படத்தின் மலையாள ரீமேக்கில் மஞ்சிமா மோகனும், தெலுங்கு ரீமேக்கில் தமன்னாவும், கன்னட ரீமேக்கில் பாருல் யாதவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு
பாரீஸில் வெயிலை ரசித்தபடி நின்றிருக்கிறார் காஜல். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை புகழ்ந்து கமெண்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











