தங்கச்சி மகனை கொஞ்சும் பெரியம்மா காஜல்: க்யூட் புகைப்படங்கள்
Recommended Video

க்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்
சென்னை: காஜல் அகர்வால் தனது தங்கை மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் போன்றே நடிகையான அவரின் தங்கை நிஷா பெரிய அளவில் வர முடியவில்லை. இதையடுத்து அவர் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலானார்.

நிஷாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பெரியம்மா காஜல் அகர்வால் குட்டிப் பையனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தங்கை நிஷா, அம்மா ஆகியோர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் காஜல். குழந்தையின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சோ க்யூட் என்று தெரிவித்துள்ளனர்.

காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











