ஓ.. இந்தியன் 2 தாமதமாக காரணம் இதுதானா? போட்டுடைத்த காஜல் அகர்வால்!

சென்னை: இந்தியன் 2 படம் தாமதமாவதற்கான காரணத்தை நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. இந்தப் படம் கடந்த 2019ஆம் ஆண்டு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டது.

பிரமாண்ட செட்

பிரமாண்ட செட்

இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்காக சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

தற்காலிக நிறுத்தம்

தற்காலிக நிறுத்தம்

இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறத்தப்பட்டது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் அமல் படுத்தப்பட்டதால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

கமல் செம பிஸி

கமல் செம பிஸி

இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்துக்கும் கமலுக்கும் பிரச்சனை என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து கமலும் அரசியலில் பிஸியானார். தற்போது சட்டசபை தேர்தலிலும் மக்கள் நீதிமய்யம் கட்சி போட்டியிடுவதால் கமல் செம பிஸியாக உள்ளார்.

மீண்டும் தொடங்குமா?

மீண்டும் தொடங்குமா?

அடுத்து லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலும் நடிக்கிறார் கமல். இதனால் இந்தியன் 2 படம் தொடங்குமா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஹைத்ராபாத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் படத்தின் ஹீரோயின் ஆன நடிகை காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் பதில்

காஜல் அகர்வால் பதில்

அப்போது அவரிடம் இந்தியன் 2 தாமதம் ஆவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் பணிபுரியும் பெரும்பாலான டெக்னிஷியன்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளால் அவர்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை.

த்ரில்லிங்கான அனுபவம்

த்ரில்லிங்கான அனுபவம்

இதுதான் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாக காரணம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம் என்று கூறிய நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்திற்காக களரி கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X