இதமா பதமா வெள்ளை ஜிம்னாஸ்டிக் காஸ்ட்யூமில் க்யூட் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!
சென்னை : தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால் இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தியன் 2, ஆச்சாரியா என பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் இவர் வெப் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் எள்ளளவும் குறையாத கவர்ச்சியை காட்டி வரும் காஜல் அகர்வால் இப்பொழுது இதமா பதமா வெள்ளை ஜிம்னாஸ்டிக் உடையில் செம க்யூட்டாக இருக்கும் கிறங்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

திருப்புமுனையாக அமைந்தது
ஊர்களின் பெயர்களில் எப்பொழுதும் படங்களின் தலைப்பை வைக்கும் இயக்குனர் பேரரசு இயக்கிய பழனி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் அதன்பிறகு மோதி விளையாடு, பொம்மலாட்டம் , சரோஜா, உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தெலுங்கில் வெளியான மகதீரா மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

துப்பாக்கி
பிரம்மாண்ட சரித்திர படங்களுக்கு பெயர் போன எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய மகதீரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இங்கும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் காஜல் அகர்வாலின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்தது. பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, மாரி என இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ஹிட்டாக இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

குறை வைக்காமல்
பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்தும் கவர்ச்சி காட்டுவதில் இருந்தும் சற்று விலகி இருக்க காஜல் அகர்வாலோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அதிக அளவிலான திரைப் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவதோடு கவர்ச்சியிலும் கொஞ்சம் கூட குறை வைக்காமல் தாராளம் காட்டி வருகிறார்.
Recommended Video

செம க்யூட்டாக போஸ்
வெங்கட்பிரபு முதல் முறையாக இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் லீட் ரோலில் நடித்திருந்த காஜல் அகர்வாலுக்கு இந்தியன்2, ஆச்சாரியா போன்ற பிரம்மாண்ட திரைப்படங்கள் வெயிட்டிங்கில் இருக்க தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. ஏற்கனவே பப்பாளி பழம் போல பளபளனு இருக்கும் காஜல் அகர்வால் டைட்டான வெள்ளை ஜிம்னாஸ்டிக் காஸ்ட்யூமில் இதமா பதமா உட்கார்ந்துகொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











