பேய் வீட்டில் காஜல்.. "லைவ் டெலிகாஸ்ட்" திகில் வெப் தொடர்!
சென்னை: காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி நடிப்பில் இந்த வாரம் ஹாட் ஸ்டாரில் வெளியான வெப் தொடர் லைவ் டெலிகாஸ்ட்.
இந்த வெப் தொடரை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார், பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
ஹாரர் கதைகளத்தை கொண்டு வெளிவந்துள்ள இந்த வெப் தொடர் 7 எபிஸோடுகளை கொண்டுள்ளது.

ஹாரர் கதைகளம்
கதையின் நாயகி காஜல் அகர்வால் ஜெனிஃபர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில சிக்கல் காரணமாக மாந்த்ரீக சக்திகள் நிறைந்த ஒரு பேய் வீட்டில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை படமாக்குவதற்காக ஜெனிஃபர் மற்றும் குழுவினர் செல்கின்றனர். அப்போது அங்கு நடக்கும் அசம்பாவிதங்கள் தான் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் கதை.

ஈர்க்கும் காஜல்.
காஜல் அகர்வால் வழக்கம் போல தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். காஜலின் அறிமுக காட்சியிலுருந்து இறுதி வரை திரையில் மின்னும் காஜல் தொடருக்கு அழகு சேர்கிறார். அங்கங்கே சிகரெட் புகைக்கும் காட்சிகளிலும், கெட்ட வார்த்தை பேசும் காட்சிகளிலும் நடித்துள்ளார் காஜல்.

குணச்சித்திர நடிகர்கள்
காஜலுடன் வைபவ், கயல் ஆனந்தி எப்போதும் போல தனது பங்கை சிறப்பாக அளித்துள்ளனர். அவர்கள் மட்டுமன்றி குக் வித் கோமாளி அஸ்வின், ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப் ஆகியோரும் தனது வேலையை சரி வர செய்து சிறப்பித்துள்ளனர். நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் தொடருக்கு கை கொடுத்துள்ளது.

வீக்கெண்ட் ஸ்பெஷல்
ஹாரர் கதைகளத்தை வெங்கட் பிரபு முதல் முறையாக முயற்சித்துள்ளார். 7 எபிஸோடுகள் மட்டுமே என்றாலும் சில இடங்களில் கதையில் தொய்வு ஏற்படுகிறது, சில லாஜிக் குறைகளும் உள்ளது. குறைகளை ஒதுக்கி விட்டு பார்த்தால் வீக்கெண்ட் ஸ்பெஷலாக லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடர் அமையும்.


Click it and Unblock the Notifications











