அதிகரித்த கொரோனா.. டெக்னீஷியன்கள் மறுப்பு.. பிரபல ஹீரோயின் நடிக்க இருந்த படத்தின் ஷூட்டிங் ரத்து!
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, பிரபல நடிகை நடிக்க இருந்த படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.
தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அதிதி ராவ் ஹைதாரி
நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் நடித்து வருகிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோ. இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார். இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜான் ஆபிரஹாம்
இவர் இந்தியில் நடித்து வரும் படம், மும்பை சாகா. இதில், ஜான் ஆபிரஹாம், இம்ரான் ஹாஸ்மி, உட்பட பலர் நடிக்கின்றனர். சஞ்சய் குப்தா இயக்குகிறார். லாக்டவுன் காரணமாக, மற்றப் படங்களைப் போல இந்த படத்தின் ஷூட்டிங்கும் தடைபட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஷூட்டிங்கை மேற்கொள்ள தெலங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ராமோஜிராவ் பிலிம்சிட்டி
இதையடுத்து சில இந்தி படங்களின் ஷூட்டிங்கை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று, மும்பை சாகா. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை அங்கு 15 நாட்கள் அங்கு நடத்த முடிவு செய்திருந்தனர். காஜல் அகர்வால் உட்பட 35 பேர் மட்டும் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பது என திட்டமிட்டிருந்தனர். ஆனால், நாட்டின் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்ததை அடுத்து மும்பை சாகா படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மும்பையில் படப்பிடிப்பு
இதனால் ஷூட்டிங் திட்டத்தை கைவிட்டுவிட்டனர். மும்பை சாகா படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் உட்பட சிலர் படப்பிடிப்புக்கு வர தயக்கம் காட்டியதால், படப்பிடிப்பை ரத்து செய்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 'ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் இப்போது மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளோம். ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறோம் என்றார் இயக்குனர் சஞ்சய் குப்தா.


Click it and Unblock the Notifications











