அட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்
Recommended Video

சென்னை: மார்க்கெட் லைட்டா டல்லடித்துள்ள நிலையில் இறங்கி வந்துள்ளார் காஜல் அகர்வால். ஆனால் இந்த முடிவு அவரின் பெற்றோருக்கு கவலை அளித்துள்ளதாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் தற்போது குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்.

காஜல்
கடந்த ஆண்டு காஜல் அகர்வால் தல, தளபதி, ராணா, சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்து நடித்து பரபரப்பாக இருந்தார். இந்த ஆண்டு அந்தளவுக்கு பரபரப்பு இல்லை. அவரின் மார்க்கெட் லைட்டாக டல்லடிக்க ஆரம்பித்துள்ளது.

ஹீரோக்கள்
நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்தால் தன்னை ஓரங்கட்டிவிடுவார்கள் என்பதை காஜல் அகர்வால் புரிந்து கொண்டுள்ளார்.

இளசுகள்
சிரஞ்சீவி, தல, தளபதி என்று சீனியர் ஹீரோக்களுக்கு மட்டும் அல்ல இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க தயார் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் காஜல்.

திருமணம்
காஜலுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் அவரோ நடிப்பதில் தான் அதிக ஆர்வமாக உள்ளார். நாம் ஒன்று நினைக்க இந்த புள்ள ஒன்று செய்கிறதே என்று அவரின் பெற்றோருக்கு வருத்தமாம்.


Click it and Unblock the Notifications











