மிரட்ட போகும் ஹாரர் காமெடி.. காஜல் அகர்வாலுக்கு என்ன ரோல் தெரியுமா?

சென்னை: நடிகை காஜல் அகர்வால் பேய் படம் ஒன்றில் பெரிய நடிகர் பட்டாளத்துடன் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக பேய் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிது. முன்னணி நடிகைகள் பலரும் பேயாக நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக உள்ள காஜல் அகர்வாலும் பேயாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோஸ்ட்டி படம்

கோஸ்ட்டி படம்

அதாவது, குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் ஹாரர் காமெடி படம் ஒன்றை இயக்குகிறார். கோஸ்ட்டி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

சண்டைக் காட்சிகள்

சண்டைக் காட்சிகள்

இதற்காக ஆக்ஷன் காட்சிகளுக்கு என ஸ்பெஷலாக அவருக்கு ட்ரெயினிங் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சண்டைக் காட்சிகளுக்காக ஜெகன் மாஸ்டர் காஜல் அகர்வாலுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்கள்

இன்னும் ஓரிரு நாட்கள்

இந்த படத்தின் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ள நிலையில் அந்த காட்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் படமாக்கப்படும் என தெரிகிறது.

பெரிய நடிகர் பட்டாளம்

பெரிய நடிகர் பட்டாளம்

கோஸ்ட்டி படத்தில் காஜல் அகர்வாலுக்கு ஜோடி இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு, ஜெகன், லிவிங்ஸ்டன், சுரேஷ் மேனன், மயில்சாமி, மனோபாலா, ஆடுகளம் நரேன் உட்பட ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X