ரூ. 8 கோடிப்பு நஷ்டம்: நயன் அளவுக்கு முயன்று மூக்குடைந்த காஜல் அகர்வால்

By Siva

Recommended Video

காஜல் அகர்வால் தான் கற்றுள்ள புது வித்தை பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஹைதராபாத்: காஜல் அகர்வால் பெரிதும் எதிர்பார்த்த சீதா படம் ஊத்திக் கொண்டது.

தேஜா இயக்கத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக நடித்த சீதா படத்தில் காஜல் அகர்வால் வித்தியாசமான தொழில் அதிபராக வந்திருந்தார். நடிப்புக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் கிடைத்துவிட்டது இனி வேட்டை தான் என்று காஜலும் சந்தோஷமாக அந்த படத்தில் நடித்தார்.

படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்த்தவர்கள் அடேங்கப்பா, நம்ம காஜலா இது, நடிப்பில் மிரட்டுகிறாரே என்றார்கள். அதை கேட்டு காஜலுக்கு உச்சி குளிர்ந்தது. ஆனால் அது நிலைக்கவில்லை.

Kajal Agarwals Sita declared flop

சீதா படம் ரிலீஸாகி எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. வழக்கமாக பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் படங்களுக்கு நல்ல ஓபனிங்காவது இருக்கும். இந்த படத்திற்கு அதுவும் இல்லை. பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜலுக்கு மோசமான பிளாப் படமாக அமைந்துவிட்டது இந்த சீதா.

ஏற்கனவே படத்தை பார்த்தவர்கள் கழுவிக் கழுவி ஊத்தி தியேட்டருக்கு போகலாம் என்று இருந்தவர்களின் மனதை மாற்றினார்கள். இது போதாது என்று தமிழ் ராக்கர்ஸ் வேறு சீதா படத்தை நல்ல பிரிண்ட்டில் வெளியிட்டு வசூலில் மேலும் மண்ணை அள்ளிப்போட்டு மூடு விழா பார்த்துவிட்டது. அதுவும் படம் ரிலீஸான சில மணிநேரத்திலேயே ஆன்லைனில் கசியவிட்டு படக்குழுவை கதறவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

Kajal Agarwals Sita declared flop

சீதா படத்தால் ரூ. 8 கோடி நஷ்டமாம். சீதா படத்தை ரூ. 15 கோடிக்கு வியாபாரம் செய்த நிலையில் இப்படி ஒரு நஷ்டம். காஜல் ராங்கியாக நடித்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவரை வழக்கம் போன்று சிரித்த முகமாக வந்து ஹீரோவை காதலித்து, டூயட் பாடிவிட்டு செல்லும் கதாபாத்திரங்களில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

எப்பொழுது பார்த்தாலும் ஒரே மாதிரியாக நடித்து போர் அடித்துவிட்டது. இனி படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று காஜல் அகர்வால் அடிக்கடி கூறி வருகிறார். இந்நிலையில் தான் சீதா படத்தில் வித்தியாசமாக நடித்து படம் பிளாப் ஆகிவிட்டது.

சீதா படம் படுதோல்வி அடைந்த போதிலும் தன்னை சுற்றியே நகரும் பாரீஸ் பாரீஸ் படம் கை கொடுக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டுள்ளார் காஜல் அகர்வால். நடிப்பு ராட்சசியான கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி ஹிட்டான குயீன் படத்தின் ரீமேக் பாரீஸ் பாரீஸ். அதனால் படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் காஜலின் நடிப்பை கங்கனாவுடன் ஒப்பிடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X