நான் பிழை... நீ மழலை... மகனின் முதல் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்
மும்பை : நடிகை காஜல் அகர்வால் சிறப்பான நடிகையாக இருந்தவர். தற்போது திருமணம் முடித்து மகனையும் பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் இன்று அன்னையர் தினத்தையொட்டி தனது மகனின் புகைப்படத்தை முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் பழனி படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனுடம் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிப் படங்கள், இந்தி படங்கள் என பிசியாக நடித்துவந்தார் காஜல் அகர்வால்.

கர்ப்பகால புகைப்படங்கள்
இந்நிலையில் கடந்த ஆண்டில் கௌதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்ட காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்தார். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு நெய்ல் என்ற மகன் பிறந்துள்ளார். கர்ப்பமானதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய கர்ப்பத்தை வெளிக்காட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

பிரசவத்திற்கு பிந்தைய புகைப்படங்கள்
இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. இதையடுத்து தற்போது தன்னுடைய பிரசவத்திற்கு பிந்தைய புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார் காஜல் அகர்வால். அழகான உடையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஏராளமான லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.

மகனின் புகைப்படம்
இதையடுத்து அவரது மகனின் புகைப்படம் எங்கே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி அவர் தனது மகன் நெய்ல் கிட்சுலுவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தன்னுடைய மகனை தன்னுடைய மார்புடன் அணைத்தபடியான புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

சிறிய இளவரசன்
இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தூய்மையான அன்பை தனக்கு தன்னுடைய மகன் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் தன்னுடைய இதயம் தனது உடலுக்கு வெளியில் இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தன்னுடைய மகன் தன்னுடைய சிறிய இளவரசன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

குழந்தையின் புகைப்படம்
முன்னதாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை வைத்துவந்த நிலையில், இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் தனது மகன் தனக்கு எல்லாமுமாக உள்ளதாக அவர் கூறியுள்ளதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











