twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொறுத்தது போதும்.. பொங்கியெழுந்த காஜல்.. கமலின் இந்தியன் 2வில் இருந்து வெளியேறினார்?

    காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    |

    சென்னை: இன்னும் பட வேலைகள் ஆரம்பிக்காததால், இந்தியன் 2வில் இருந்து நடிகை காஜல் அகர்வால் வெளியேற முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். 2.0 படத்தைத் தொடர்ந்து, இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் வேலையில் இறங்கினார் ஷங்கர். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த கமலே, இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு மேக்கப் டெஸ்டுகள் கூட நடத்தப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் இந்தியன் 2 படத்தின் பூஜை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

    வியந்து போன விவேக்.. பெரிய்ய வேலை சார் இது... அப்பப்பா!!! வியந்து போன விவேக்.. பெரிய்ய வேலை சார் இது... அப்பப்பா!!!

    பிரச்சினையோ பிரச்சினை:

    பிரச்சினையோ பிரச்சினை:

    ஆனால், படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்தப்பட்டது. படக்குழுவினரிடையே பிரச்சினை, தயாரிப்பு நிறுவனத்தில் பணமில்லை, அரசியல் பின்னணி எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இதனால், லைகா நிறுவனம் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தது.

    பிரச்சாரத்தில் பிஸி:

    பிரச்சாரத்தில் பிஸி:

    இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை முதன்முறையாக களமிறக்கினார் கமல். தான் போட்டியிடாவிட்டாலும், தனது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். இதனால் இந்தியன் 2 பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டன.

    கால்ஷூட் :

    கால்ஷூட் :

    இதற்கிடையே, இந்தியன் 2 பட வாய்ப்பு அமைந்ததால், மற்ற சில படவாய்ப்புகளை மறுத்து விட்டார் காஜல். இப்படம் மூலம் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என அவர் திட்டமிட்டார். ஆனால், பூஜையோடு படம் கிடப்பில் போடப்பட்டதால், அவரது கால்ஷீட் வீணானது.

    வெளியேற முடிவு:

    வெளியேற முடிவு:

    இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜூன் 2ம் தேதி முதல் இந்தியன் 2 படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என காஜல் தெரிவித்திருந்தார். ஆனால், அதுவும் நடைபெறவில்லை. இதனால், இப்படத்தை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால், தனக்கு புதிய படவாய்ப்புகளே அமையாது என முடிவுக்கு வந்த காஜல், தற்போது அப்படத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளாராம்.

    பிக் பாஸ் 3:

    பிக் பாஸ் 3:

    இது ஒருபுறம் இருக்க, கமல் பிக் பாஸ் சீசன் 3யை தொகுத்து வழங்க முடிவு செய்திருக்கிறார். வரும் 23ம் தேதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வாரம் இரண்டு நாட்கள் கமல் வந்து, தொகுத்து வழங்குவார் என்பதால், அடுத்த 100 நாட்களுக்கு அவர் ரொம்பவே பிஸி. இதனால் இப்போதைக்கு இந்தியன் 2 பட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்காது எனத் தெரிகிறது.

    English summary
    The sources says that actress Kajal agarwal has walked out of Kamal, Shankar's Indian 2, as the shooting is delay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X