நாட்டுக்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியடையட்டும்: மோடிக்கு காஜல் அகர்வால் வாழ்த்து
மும்பை: உங்களுடைய எண்ணங்கள் வெற்றியடையட்டும் என்று பிரதமர் மோடியை காஜல் அகர்வால் வாழ்த்தியுள்ளார்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது 68 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பல முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் பலரும் நரேந்திர மோடியை வாழ்த்தினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிரதமருக்கு நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். "மரியாதைக்குரிய நம்முடைய பிரதமருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டுக்காக நீங்கள் முன்னெடுத்துள்ள ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். உத்வேகமூட்டிக் கொண்டே இருங்கள்" என குறிப்பிட்டார்.
காஜல் அகர்வாலுக்கு தற்போது குயின் திரைப்பட தமிழ் ரீமேக் ரிலீஸ் ஆக உள்ளது. அவர் தற்போது அதிகமாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











