பார்க்கப் பார்க்க திகட்டாத மஞ்சகாட்டு மைனா.. சேலையில் அள்ளுது அழகு !

சென்னை : திருமணத்தை முடித்த கையோடு மஞ்சள் சேலையில் இருக்கும் கண்ணைப் பறிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் பலராலும் விரும்பக்கூடிய நடிகையாவார்.

கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் சமீபத்தில் கௌதம் என்பவரை கரம் பிடித்ததை அடுத்து இவரது புகைப்படங்கள் இப்பொழுது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது

திடீரென திருமணம்

திடீரென திருமணம்

இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கைநிறைய படங்களுடன் செம பிஸியாக நடித்து வந்தாலும், திடீரென இப்பொழுது திருமணம் செய்துகொண்டது ரசிகர்கள் பலரையும் காதல் தோல்வி பாடலை பாட வைத்துள்ளது.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

முட்ட கண்ணு முழி, க்யூட்டான நடிப்பு என தனக்கே உரித்தான பாணியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித் சூர்யா கார்த்தி என பலருடன் இணைந்து நடித்து தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

கனவுக்கன்னியாக

கனவுக்கன்னியாக

ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியிட்ட அறிக்கையின்படி, இப்பொழுது கௌதம் என்பவரை கரம் பிடித்துள்ளார்.

சோசியல் மீடியாக்களில் வைரல

சோசியல் மீடியாக்களில் வைரல

மிகக் கோலாகலமாக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இவர்களது கல்யாணம் மற்றும் அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வரும் வரும் நிலையில் காஜல் அகர்வாலும் அவரது கணவர் கௌதமும் எடுத்துக் கொண்ட சில க்யூட்டான புகைப்படங்கள் ரசிகர்களின் அன்பையும் ஆசீர்வாதங்களையும் அள்ளிவருகிறது.

முதல் வெப்சீரிஸ்

முதல் வெப்சீரிஸ்

பாரிஸ் பாரிஸ், ஹேய் சனாமிகா, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் அதே சமயம் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "லைவ் டெலிகாஸ்ட்" என்ற வெப்சீரிஸிலும் இவர் நடித்து வருகிறார். இது இவரது முதல் வெப்சீரிஸ் ஆகும்.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL
மஞ்ச காட்டு மைனா

மஞ்ச காட்டு மைனா

தடபுடலாக நடந்த கல்யாணத்தை தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட்களையும் நடத்தி அசத்தி வரும் காஜல் அகர்வால் மஞ்சள் புடவையில் கொள்ளை கொள்ளும் அழகில் பார்க்கப் பார்க்க திகட்டாத வகையில் வெளியிட்டிருக்கும் இந்த அட்டகாசமான வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ள நிலையில் பலர் இவரை "மஞ்ச காட்டு மைனா" என பாட்டு பாடி செல்லமாக அழைத்தும் திருமண வாழ்த்துக்களை கூறியும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X