கமலுக்கு அம்மாவா காஜல் அகர்வால்?.. இந்தியன் 3 படத்தில் அப்படியொரு ரோலை உருவாக்கிய ஷங்கர்!

சென்னை: சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மேலும் மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

அனிருத் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தின் டிரைலர் கமல் ரசிகர்களை பயங்கர உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று படத்தை வேற லெவலில் புரமோட் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

Indian 3 Kamal Haasan Kajal Aggarwal 3

2.0 படத்திற்கு பிறகு ஆறு வருடங்களுக்கு பிறகு ஷங்கர் படம் வெளியாக உள்ள நிலையில், நிச்சயம் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரம்மாண்ட படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழில் பிரம்மாண்ட படமாக இந்தியன் 2 உருவாகியுள்ளது.

சேனாபதி அப்பாவாக கமல்: இந்தியன் 2 திரைப்படத்தில் சம்மதிக்க காரணமே இந்தியன் 3 திரைப்படம் தான் என கமல்ஹாசன் தற்போது இந்தியன் திரைப்படம் குறித்த மிகப்பெரிய அப்டேட்டை கூறியுள்ளார். சந்துரு கமலாகவும், சேனாபதியாகவும் கமல்ஹாசனை பார்த்த ரசிகர்கள் இந்தியன்3 படத்தில் சேனாபதியின் அப்பாவாகவும் நடித்து இருப்பதை பார்க்க போகிறார்கள் என்கிற அட்டகாசமான விஷயத்தை கமல்ஹாசன் ரிவீல் செய்துள்ளார்.

காஜல் அகர்வால் அம்மா?: இந்தியன் திரைப்படத்தில் தான் காஜல் அகர்வால் நடித்துள்ளார் என்றும் இந்தியன் 2 படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் இயக்குநர் சங்கர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறிய நிலையில், சேனாபதியே அம்மாவாக காஜல் அகர்வால் நடித்துள்ளாராம் என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சேனாபதியின் அப்பா கமலுக்கு ஜோடியாகவே காஜல் அகர்வால் நடித்திருப்பார் என ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர்.

கை கொடுத்த கல்கி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் முதல் நாளில் 191 கோடி ரூபாய் வசூலும் 2ம் நாளில் 300 கோடியை நெருங்கிய வசூலும் பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசனின் நடிப்பை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அதிர்வலை நிச்சயம் இந்தியன் 2 படத்தில் அவரது நடிப்பை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வரவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஜே. சூர்யா ராசி: மேலும், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வரும் நிலையில், இந்த படத்திலும் உடல் முழுக்க தங்கங்களை அணிந்துக் கொண்டு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். மேலும், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் உடன் புரமோஷனல் டூர் சென்றுள்ளார். கண்டிப்பாக எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை இந்தியன் 2 திரைப்படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 வெற்றிப் பெற்றால், இந்தியன் 3 படத்தில் சேனாபதியின் அப்பா கதாபாத்திரம் எப்படி இருக்கப் போகுது என்றும் திருப்பதியில் படமாக்கப்பட்ட பீரியட் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் இருந்து ஒரு வெயிட்டான பான் இந்தியா படத்தை ஷங்கர் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X